வைகைநதி பாதுகாப்பு விழிப்புணர்வு பாதயாத்திரை வைகை பெருவிழா-2019..

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் மதுரை மக்கள் இணைந்து நடத்தும் வைகைநதி பாதுகாப்பு விழிப்புணர்வு பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பாய்ந்தோடும் நதிகளில் நான்காவது பொிய நதியான வைகை நதியின் புனிதத்தை மீட்டெடுப்பதற்கும்,வருங்கால சந்ததியினருக்கு வளம் சோ்ப்பதற்கும் வைகைநதி பாய்ந்தோடும் மாவட்டங்கள் உள்ள மக்களை இணைத்து மாபெரும் விழா எடுப்பதாகவும், இவ்விழா 12நாட்கள் வெகுவிமர்சையாக அனைத்து சமூக, சமுதாய மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு வைகை நதியைப் பற்றி விழிப்புணா்வு பாதயாத்திரை வரும் 24.3.2019 ஞாயிறு அன்று காலையில் தேனி மாவட்டம் மேகமலையில் உள்ள சின்ன சுருளி நீர்வீழ்ச்சியில் துவங்கி வைகை நதியின் கரையோர நகரங்களான தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி வழியாக இராமநாதபுரம் வைகை ஆற்றின் முகப்புப் பகுதியான ஆற்றங்கரையை அடைய இருக்கிறது.

இந்த பாதயாத்திரையில் தெருமுனைப் பிரச்சாரம், துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் வைகை நதியில் ஆங்காங்கு வழிபாடு செய்தல் ஆகியவற்றின் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனா்.வைகைநதி விழிப்புணர்வை பாதயாத்திரையை தொடர்ந்து  பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாரத்தான் நடைபெற உள்ளதாகவும் மேலும் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.இந்நிகழ்வில் தலைவர் சுவாமி இராமனந்தா, செயலாளர் சுவாமி வேதாந்த ஆனந்தா, பொருளாளர்  இராஜன் மற்றும் வைகைப் பெருவிழா கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனா்.

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…