முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 19/03/2019 அன்று 11.30 மணியளவில் கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வு கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிராபானு கமால் அவர்கள் தலைமையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வாணி கிராமம், இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் S.பரமேஸ்வரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

பின்பு முதலாமாண்டு மாணவி கணிதவியல் துறையைச் சார்ந்த அபிநயாவும், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த V.ஜனனியும் கழிப்பறையின் பயன்களைப் பற்றியும், அதனை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் பற்றியும் மாணவ மாணவிகளுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தனர். மேலும், “அகமும், புறமும் வாய்மை காப்போம். உள்ளும், வெளியும் தூய்மை காப்போம். எங்கள் வீடு, எங்கள் வீதி, எங்கள் நாடு, எங்கள் தூய்மை, எங்கும் பசுமை காண்போம்” என்று உறுதி மொழி எடுத்தனர். இறுதியாக தமிழ்துறை உதவிபேராசிரியை Dr.H.பாத்திமா நன்றியுரை வழங்க இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..