கீழக்கரையில் ஐக்கிய ஜமாத் மற்றும் சமூக அமைப்புகள் பங்கு பெற்ற மாபெரும் கூட்டம்….

கீழக்கரை எட்டு ஜமாஅத் கூட்டமைப்பு,சமூக மற்றும் சமுதாய அமைப்புகள் சார்பாக நேற்று மாலை 7 மணியளவில் ஹூசைனியா மஹாலில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம்கள் நிறைவேற்றப்பட்டது:-

1)கீழக்கரை நகராட்சி சார்பாக மனு கொடுத்த அனைத்து பொதுமக்கள்,ஜமாஅத்தார்கள் மற்றும் சமூக இயக்கங்களை அழைத்து பேசி வரி உயர்வுவை குறைக்கும் வரை வரி கட்டுவதை காலதாமதம் செய்வது என்றும்,இது சம்பந்தமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2)கீழக்கரை நகராட்சிக்கு உடனடியாக ஆணையரை நியமிக்க அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3)இராமேஸ்வரம்,கீழக்கரை பேரூராட்சிகள் ஒரே நேரத்தில் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் இரண்டும் கடற்கரை சார்ந்த பகுதியாக இருந்து இராமேஸ்வரம் சுற்றுலா தளமாக நிலையில் அங்கு ஐம்பது சதவீதம் வரி உயர்த்தப்பட்டு உள்ளது.ஆனால் கீழக்கரை நகராட்சி மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் தன்னிச்சையாக வரி விதிப்பு செய்ததை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4)இரண்டரை கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள கீழக்கரை பகுதியை எந்த அடிப்படையில் A B C என்று தரம் பிரிக்கப்பட்டது.அதன் எல்லைகள் பற்றிய விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கீழக்கரை நகராட்சியை கேட்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5)கீழக்கரை நகராட்சி வரி விதிப்பை எதிர்த்து சமூக அமைப்புகள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் அனைத்து ஜமாஅத் பிரதிநிதிகள்,சமூக மற்றும் சமுதாய அமைப்புகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.