கடையநல்லூரில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி- கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்பு…

லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் வாக்காளரிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கடையநல்லூர் தாலுகா அலுவலகம் சார்பில், கடையநல்லூர் அருகே பண்பொழி சாலையில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் 18.03.19 நேற்று காலை மாவட்ட உதவி ஆட்சியர் பயிற்சி சுகபுத்திரா இ.ஆ.ப தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் வேலம்மாள், வட்டாச்சியர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், வாக்குப்பதிவு தினமான 18.04.19 அன்று மாணவ, மாணவியர் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அதன் பின்னர் மாதிரிவாக்கு பதிவு இயந்திரத்தில் வாக்குகளை மாணவ மாணவியர்கள் பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் துணைதாசில்தார் ஏசுராஜன், மனோகரன், ஆய்குடி வருவாய் ஆய்வாளர் மல்லிகா, கடையநல்லூர் வருவாய் ஆய்வாளர் முருகன், இடைகால் கிராம நிர்வாக அலுவலர் மகேஷ்வரி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஆனந்த்,பவுல் மகேஷ், மாரியம்மாள், முருகன், துரைலிங்கம் , மரகதகோமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியில் தாமிரபரணி கலைக்குழுவின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்