9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த இரண்டு ஆட்டோ டிரைவர்கள் கைது..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா தனக்கன்குளம் பகுதியில் வசித்து வரும் அங்குசாமி மகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி. அம்மாணவி தினமும் ஆட்டோ மூலமாக பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

நேற்று (18/03/2019)  பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது ஆட்டோ டிரைவர் விஜயகுமார் மற்றும் அவரது நண்பர் பிரதாப் ஆகியோர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளனர். மாணவி கூச்சலிட்டு தன் காரணமாக அவரை வீட்டில் இறக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

பின்பு மாணவி மற்றும் அவரது அப்பா அங்கு சாமி கொடுத்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார் மற்றும் பிரதாப்பை காவல்துறையினர் கைது செய்தனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

July Issue…

July Issue…