Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மூன்று இடங்களில் வாகன சோதனை ரூ.3.25 லட்சம் பறிமுதல்..

மூன்று இடங்களில் வாகன சோதனை ரூ.3.25 லட்சம் பறிமுதல்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி இசிஆர் மெயின் ரோடு சோதனை சாவடியில்  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் முடியப்பதாஸ், சிறப்பு எஸ்ஐ., இளங்கோவன் தலைமையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி நிலைத்த கண்காணிப்பு குழு சோதனை நடத்தினர்.

அப்போது மீமிசலில் இருந்து திருநெல்வேலி சென்ற டி என் 72 பி கே 7842 என்ற எண்ணுள்ள காம்போசிஷன் ஜீப்பை மறித்து விசாரித்தனர். நெல்லை, பாளையங்கோட்டை முத்துராஜ் என்பவர் ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.1,09,000/ஐ பறிமுதல் செய்தனர். பரமக்குடி – எமனேஸ்வரம் காந்தி நகரில் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகபெருமாள் தலைமையில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை  வாகன சோதனை செய்தனர்.  அப்போது உரிய ஆவணம் இன்றி எடுத்துச்  ரூ.1 லட்சத்தை வெங்கட்டான் குறிச்சி ராதாகிருஷ்ணனிடம் பறிமுதல் செய்தனர்.

இந்த தொகை தேர்தல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டது. எமனேஸ்வரம்  வைகை நகரில் பறக்கும்படை தாசில்தார் நாகராஜ் தலைமையில் வாகன சோதனை நடத்தினர். வைகை நகர்  பைராம் கான் என்பவர் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.1.16 லட்சம் பறிமுதல் செய்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!