கச்சத்தீவு திருவிழா இன்று (15/03/2019) மாலை துவக்கம் பாதுகாப்பு கவசம் அணிந்து படகில் கிளம்பிய பக்தர்கள்..

இன்று மாலை (15/3/2019) கொடியேற்றத்துடன் துவங்கும் கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து 2,453 பக்தர்கள் பாதுகாப்பு கவசம் அணிந்து படகுகளில் இன்முகத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய சிலுவைப் பாதை திருவிழா ஆண்டுக்கு ஒரு முறை 2 நாள் நடைபெறுகிறது. இதில் இந்திய, இலங்கை பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்கின்றனர். இந்தாண்டு திருவிழா இன்று ( 15.3.2019) மாலை சிறப்பு திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. இதை தொடர்ந்து சிலுவைப் பாதை நடக்கிறது. நாளை (16/3/2019) காலை விழா நிறைவு திருப்பலியுடன் கொடி இறக்கப்படுகிறது. இரண்டு நாள் விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து 65 விசைப்படகுகள், 15 நாட்டுப் படகுகளில் 415 பெண்கள் உள்பட 2,453 பேர் இன்று காலை புறப்பட்டனர். கச்சத்தீவு செல்லும் பக்தர்களை கூடுதல் எஸ்.பி., தங்கவேல், ராமேஸ்வரம் டிஎஸ்பி., மகேஷ் தலைமையில் போலீசார், கியூ பிரிவு, மத்திய, மாநில உளவு பிரிவு அதிகாரிகள் உரிய விசாரணை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், உடன் எடுத்துச் செல்லும் உடமைகளை இன்று (15/03/2019) காலை சோதனை செய்தனர். பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பு கவசம் அணிந்து இன்முகத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.

இந்திய, இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோரக் காவல் படை, இலங்கை கடற்படை வீரர்கள் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..