மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் : தொல்.திருமாவளவன்..

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் முதல்முறையாக கன்னியாகுமரியில் தனது பரப்புரையை துவங்குகிறார். இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் .

இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறிய அவர்தமிழகத்தில் தமிழகம் புதுச்சேரி உள்பட 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் பொள்ளாச்சி சம்பவம் தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு என்ற அவர், பொள்ளாச்சி சமபவத்தில் சம்பந்த பட்டவர்களை நீதிமன்ற கண்காணிப்பு குழுவின் கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணை குழு மூலம் விசாரணை செய்ய வேண்டும். நீதிமன்ற கண்காணிப்பு குழுவின்  விசாரணை கேட்டு 15 தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார். மேலும் கூறுகையில் மோடி மிகவும் ஆபத்தனவர். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image