நாடாளுமன்ற தேர்தல் தேதியை மாற்றி வைக்க தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு..

நாடாளுமன்ற தேர்தல் தேதியை மாற்றி வைக்கக் கோரி சி.எஸ்.ஐ திருச்சபை நிர்வாகிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தனர். சென்னை தலைமை செயலகத்தில் சி.எஸ்.ஐ திருச்சபையைச் சேர்ந்த நிர்வாகிகள் நாடாளுமன்ற தேர்தல் தேதியை மாற்றி வைக்கக் கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் மனு அளித்தனர்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், புனித வெள்ளி ஏப்ரல் 19 ஆம் தேதி வருவதால் அந்த வாரம் முழுவதும் கிறிஸ்தவர்கள் அனைவரும் நோன்பு மேற்கொண்டு திருச்சபை பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்கள் எனவும் அந்த நேரத்தில் தேர்தல் வைப்பது தங்களுக்கு இடையூறாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக தேர்தல் தேதியை மாற்றி வைக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளதாகவும் தங்கள் மனு பரிசீலனை செய்யப்படும் என அவர் பதிலளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..