காவல்துறையினர் மற்றும் அவர்களது குடுபத்தினர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவது தொடர்பான கூட்டம்…

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தார் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பணம் செலுத்தாமல் மருத்துவ சிகிச்சை பெறுவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அலுவலர்கள் மேற்படி காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற 32 மருத்துவமனைகளில் இருந்து 26 அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் காவல்துறையினர் மற்றும் அவரது குடும்பத்தார்கள் பணம் இல்லாமல் எளிய முறையில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் மற்றும் கால தாமதம் இல்லாமலும் சிறந்த முறையிலும் மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை வழங்குவதில் நிர்வாகரீதியாக ஏதும் பிரச்சினைகள் உள்ளதா எனவும் கேட்டறிந்தார். மேலும், கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் ஆலோசனை வழங்கினார்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..