மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை பொருளதார கல்வி பற்றிய கண்காட்சி…

அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் சார்பாக அந்த அமைப்பின் தென் இந்தியாவின் தலைவர் பாஸ்கரன் தலைமையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 18 மாநகராட்சி பள்ளி மாணவர்கள் & மாணவியர்களுக்கு அடிப்படை பொருளதார கல்விப் பற்றிய கண்காட்சி மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள என்.எஸ்.எம்.எஸ் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. இக்கண்காட்சியை  மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் தொடங்கி வைத்தார்.
இக்கண்காட்சியில் 12 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது. அதில் வங்கி,தபால் நிலையம், பிரதமர் திட்டம்,பைனான்ஸ்,அழகு சாதனங்கள், பங்குச்சந்தை, தங்கம், இயற்கை தானியங்களால் உருவாக்கிய உணவு பொருட்கள் ஆகியவற்றில் எப்படி முதலீடு செய்வது அதில் எவ்வளவு லாபம் கிடைக்கும்  என்பதைப் பற்றி அடிப்படை பொருளதார கல்வியை மாணவர்கள் அறிந்து  கொண்டு அதுபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் கண்காட்சியாக இவை அமைக்கப்பட்டிருந்தது.
மாநகராட்சி மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை பொருளதார கல்விப் பற்றிய விழிப்புணர்வை இது போன்ற கண்காட்சி மற்றும் காணொலிக்காட்சிகள் மூலம் அமெரிக்கன் இந்திய பவுண்டேஷன் தமிழகம் முழுவதும்  கடந்த மூன்று வருடங்களாக செய்து வருகிறது.இந்நிகழ்வில் என்.எஸ்.எம்.எஸ் பள்ளியின் தலைமையாசிரியர் அன்பு மற்றும் ஆசிரியர்கள்,கனரா வங்கி மேலாளர் முத்துலெட்சுமி, ஆகியோர் கலந்து  கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் மதுரை கிளை ஒருங்கிணைப்பாளர் ரம்யா ஏற்பாடு செய்திருந்தார்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..