முதுகுளத்தூர் அருகே ரூ.1.40 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் அதிகாரிகள் நடவடிக்கை..

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கமுதி தேர்தல் பறக்கும் படை குழுவினர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார் சிறப்பு எஸ்ஐ., ராஜ பூபதி, தலைமை காவலர்கள் ராமபாண்டி, கமலநாதன் செல்வம் ஆகியோர் முதுகுளத்தூர் – செல்வநாயகம் பாலம் அருகே நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த மேல சிறுபோது கூட லிங்கம் வைத்திருந்த பர்சை வாங்கி சோதனை செய்தனர். அதில் 2000 x 44 = 88,000 500 x102 = 51,000 200x 2 = 400 100x 6 = 600 என ரூ.1.40 லட்சம் இருந்தது. இப்பணம் குறித்து விசாரித்த போது பரமக்குடி சந்தையில் ஆடுகளை விற்று கொண்டு செல்வதாக  கூடலிங்கம் கூறினார். உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.1.40 லட்சத்தை தேர்தல் நடத்தை விதிகள் அமலின் படி தேர்தல் பறக்கும் படை குழுவினர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..