தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆவணமின்றி கொண்டு வந்த பணம் பறிமுதல்..

உச்சிப்புளி அருகே நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராமநாதபுரம் சட்டசபை தொகுதி நிலைத்த கண்காணிப்பு குழுவினர் திருவாடானை துணை  வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் முடியப்பதாலஸ் சிறப்பு எஸ்ஐ., இளங்கோவன், தலைமை காவலர் கோதண்டபாணி ஆகியோர் ராமேஸ்வரம் நெடுஞ்சாலை உச்சிப்புளி அருகே பிரப்பன் வலசை சோதனை சாவடியில் இன்று மாலை (14.3.2019) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த கன்னியாகுமரி சின்ன முட்டம் கார்மல் மாதா கோயில் தெரு வென்சிலால் மகன் சகாய ரூபனிடமிருந்து  2000 x13 = 26,000 500 x238 = 1,19,000 என ரூ.1.45 லட்சம் இருந்தது. இப்பணம் குறித்து விசாரித்த போது சாமான்கள் வாங்க மதுரைக்கு கொண்டு செல்வதாக சகாய ரூபன் முரண்பட்ட தகவல் தெரிவித்தார். உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.1.45 லட்சத்தை தேர்தல் நடத்தை விதிகள் அமலின் படி தேர்தல் நிலைத்த கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர். ஒரே நாளில் ரூ.2.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதே போல் மதுரை மீனாட்சி கல்லூரி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின் போது மதுரை சென்ரல் மார்க்கெட்டை சேர்ந்த தேங்காய் வியாபாரி நீதி உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வந்த 61 ஆயிரத்து 160 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர் செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..