வருவாய்த்துறை மூலமாக மாத உதவித்தொகை பெரும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..

எண்பது  (80) வயதை கடந்த மாற்றுத்திறனாளிகள், முதியோர், விதவை உள்ளிட்ட அனைவருக்கும் இம்மாதம் முதல் வருவாய்த்துறை மூலமாக வழங்கும் உதவித்தொகையானது போஸ்ட் ஆபிஸ் மூலமாக பயனாளிகளின் வீட்டிற்க்கே வந்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மிகுந்த சிரமப்பட்டு வங்கிக்கு வந்து காத்திருந்து பணத்தை பெற்றுச்செல்வதிலும், கைரேகை உள்ளிட்ட பல நடைமுறைகள் சிக்கலாக இருப்பதாலும் தமிழக அரசு மேற்குறிப்பிட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக அரசு மேற்கண்ட நடைமுறைக்கு மாறியிருப்பதால் உதவித்தொகை இம்மாதம் மட்டும் தாமதமாக வர வாய்ப்புள்ளது. எனவே, உதவித்தொகை பணம் வரவில்லை என யாரும் அலையவேண்டாம். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஒரு வாரம் கழித்தும் வராதவர்கள் அந்தந்த தாலுகா அலுவலகத்தை தொடர்புகொள்ளுமாறு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P.செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S.பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..