இராமேஸ்வரம் போலீசில் சிக்கிய இலங்கை கடத்தல்காரரிடம் விசாரணை..

தனுஷ்கோடி கடற்பகுதியில் நேற்று (12.3.2019) காலை 2 மூடை கஞ்சா கரை ஒதுங்கியது, கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் கடத்தல் காரர்கள் குறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இன்று (13/3/19) காலை கஞ்சா கடத்துவதற்காக இலங்கை அகதி தலைமன்னார் ஜெயசீலன், தனுஷ்கோடி மணல் திட்டில் மறைந்திருந்த போது தனுஷ்கோடி போலிசாரிடம் சிக்கினார்.

விசாரணையில், நேற்று (மார்ச் 12) காலை தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தும் போது இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து வந்தனர். அவர்களை கண்ட ஜெயசீலன் கஞ்சா மூடைகளை கடலில் வீசி மணல் திட்டில் தலைமறைவாக இருந்துள்ளார். அதன் பிறகு நீந்தி கரைக்கு வருவதையறிந்த போலீசார் ஜெயசீலன் கைது செய்யப்பட்டார். கடத்தல் தொடர்பாக 2008 இல் மண்டபம் போலீசில் இவர் மீதா வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..