Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கோவில்பட்டி அருகே வாக்குசாவடி கேட்டு பொது மக்கள் கருப்புக்கொடியுடன் போராட்டம் – தேர்தலை புறக்கணிக்க முடிவு…

கோவில்பட்டி அருகே வாக்குசாவடி கேட்டு பொது மக்கள் கருப்புக்கொடியுடன் போராட்டம் – தேர்தலை புறக்கணிக்க முடிவு…

by ஆசிரியர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் திருமங்கலகுறிச்சி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் மூர்த்திஸ்வரம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த ஊரில் 350 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் அமைக்கப்படும் வாக்குசாவடி மையத்தில் வாக்களித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தீடீரென இங்குள்ள வாக்குசாவடி மையம், பெரியசாமிபுரத்தில் அமைக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் மட்டும் வழக்கும் போல மூர்த்திஸ்வரம் கிராமத்தில் வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்ட மன்ற, நாடாளுமன்ற தேர்தலுக்கு பெரியசாமிபுரத்திற்கு சென்று வாக்காளிக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், மேலும் அச்சறுத்தில் இருப்பதாலும், போதிய பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதால் மீண்டும் மூர்த்திஸ்வரம் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் மீண்டும் தங்கள் கிராமத்தில் வாக்குச்சவாடி அமைக்க கோரி அக்கிராம மக்கள் ஊர் முன்பு கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்கு சாவடி வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கையை ஏற்று தங்கள் கிராமத்தில் வாக்குச்சவாடி அமைக்கவில்லை என்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!