மதுரை மாநகர பொதுமக்களுக்கு காவல் ஆணையர் அன்பான வேண்டுகோள்…

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகவும் மற்றும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பிற கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் வாங்கிகொடுப்பதாக பணத்தை பெற்றுக்கொண்டு பலர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வருகின்றனர். எனவே அதனை தடுக்கும் பொருட்டு மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலையும், மருத்துவக்கல்லூரி மற்றும் பிற கல்லூரிகளில் படிப்பதற்கான இடமும் தகுதியின் அடிப்படையில் தான் வழங்கப்படுகின்றன. அவ்வாறு இருக்கும்போது யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் மேலும் பணம் பெறுபவர்களை மட்டுமல்லாமல் பணம் கொடுப்பவர்கள் மீதும் கடுமையான குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

எனவே அரசு வேலை மற்றும் கல்லூரிகளில் பணம் கொடுத்து குறுக்குவழியில் இடம் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தை பொதுமக்கள் அனைவரும் மாற்றவேண்டும் என்பதற்காக மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப.., மதுரை மாநகர் காவல்துறையில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal