பிரதமர் மோடியை கண்டித்து வரும் 14ந்தேதி மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் தர்ணா போராட்டம் அறிவிப்பு..

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் நேற்று கோவில்பட்டியில் நடந்தது. மாநில தலைவர் பா.ஜான்சி ராணி தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் தே.லட்சுமணன், பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநில செயலாளர்கள் தோ.வில்சன், பி.ஜீவா, பி.முத்துக்காந்தாரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை மறுக்கின்ற, மதவாத, சாதியவாத அரசியல் கூட்டணிக்கு எதிராக பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்போம். மாற்றுத்திறனாளிகள் கல்வி உரிமை மறுப்புக்கு எதிராக இயக்கம் தொடங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சட்ட உரிமைகள் குறித்து தமிழகத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், ஆட்சிமன்ற பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு மாநில, மாவட்ட அளவில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கூட்டத்துக்கு பின்னர் மாநில தலைவர் பா.ஜான்சி ராணி செய்தியாளர்களிடம் கூறும்போது, பிரதமர் பொதுவெளியில் உள்நோக்கத்தோடு மாற்றுத்திறனாளி ஊனத்தை அரசியல் நையாண்டி செய்து பேசி இருக்கக் கூடிய அந்தக் கருத்து என்பது மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டம் 92 ஏ பிரிவின் படி குற்றமாகும். எனவே, அதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் காவல் நிலையங்களில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மார்ச் 14-ம் தேதி மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் சார்பில் மாலை நேர தர்ணா சென்னையில் நடத்த உள்ளோம்.  பாராளுமன்றத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை அமல்படுத்த மறுக்கின்ற ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத, தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் நேர்மையற்ற மதவாத சாதிய அமைப்புகளின் கூட்டணியாக இருக்கக்கூடிய அதிமுக,பாரதிய ஜனதா அணிக்கு எதிராக மாற்றுத்திறனாளிகளும் மாற்றுத்திறனாளி உரிமைகளில் அக்கறை இருக்கக் கூடியவர்கள், ஜனநாயக எண்ணம் கொண்ட அத்தனை பேரும் வாக்களிக்க வேண்டும். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வியில் 4 சதவீதமும் உயர்கல்வியில் 5சதவீதமும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று இருக்கக் கூடிய நடைமுறை தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் மாற்று திறனாளி கல்வி என்பது கல்வித்துறையில் கீழே இல்லை. அது மாற்றத்திறனாளி துறையின் கீழ் உள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வியின் தரத்தை பார்ப்பதற்கு அதனுடைய முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு எந்தவிதமான தகுதியும் இல்லாத மாற்றுத் திறனாளிகள் கவனிப்பது பொருத்தமற்றது. அது பள்ளிக்கல்வித்துறையின் கீழ் மாற்றப்பட வேண்டும். அது இட ஓதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும். புதிய மாற்றத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் சம்பந்தமான பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் இதைப் பற்றி புரிதல் இல்லை. எனவே, மாநில மாவட்ட அளவில் ஐஏஎஸ் ஐபிஎஸ், அனைத்து துறை அதிகாரிகளுக்கும், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் பயிற்சி அளிக்க வேண்டும், என்றார் அவர். 

புனித ரமலான் வாழ்த்துக்கள்..