Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தேர்தல் விதி மீறல் புகார்கள் மீது 90 நிமிடத்திற்குள் நடவடிக்கை முறைகேடுகள் பற்றிய புகார்களை தெரிவிப்பதற்கு 1950 என்ற TOLL FREE எண் – தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி….

தேர்தல் விதி மீறல் புகார்கள் மீது 90 நிமிடத்திற்குள் நடவடிக்கை முறைகேடுகள் பற்றிய புகார்களை தெரிவிப்பதற்கு 1950 என்ற TOLL FREE எண் – தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி….

by ஆசிரியர்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்ததால் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்த பட்டுள்ளன. 

தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக பறக்கும்படை உள்பட 4 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. தேர்தல் முறைகேடுகள் பற்றிய புகார்களை தெரிவிப்பதற்கு 1950 எனும் இலவசதொலைத்தொடர்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்க இந்த எண்ணை அழைக்கலாம்.  இந்த இலவச தொலைத்தொடர்பு என்னானது 24 மணி நேரமும் இயங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறை தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது 90நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

இதில் புகார் கூறுபவரின் பெயரை ரகசியமாக வைக்கும்படி கேட்டுக் கொண்டால் அவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். தேர்தல் விதிமீறல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவோரை தகுந்த ஆதாரத்துடன் பிடிக்கும் வகையில் அந்த செல்போன் செயலியில் வீடியோ மற்றும் போட்டோ எடுக்கும் வசதி உள்ளது. ஆகவே இதனை பயன்படுத்தி வாக்காளர்கள் தேர்தல் விதிமுறை மீறல் குறித்த புகார்களை ஆதாரத்துடன் தெரிவிக்கலாம். இவை தவிர மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக இலவச புகார் தெரிவிப்பதற்கான இலவச தொலைத்தொடர்பு என்னும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வாக்காளர்கள் அதன் வழியாகவும் தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். வாக்குக்கு பணம் வழங்கப்படுவதை தடுப்பதற்காக சிறப்பு கண்காணிப்பு குழுக்களும், பறக்கும் படை குழுக்களும் அமைக்கப் பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளின் படி தேர்தலில் ஓட்டுக்காக பணம் வாங்குவதும், பெறுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே ஓட்டுக்கு பணம் கொடுத்தாலோ அல்லது வாங்கினாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களது வாக்கினை நேர்மையாக பதிவு செய்ய வேண்டும். இந்த தேர்தலில் அரசியல் கட்சியினரின் சமூக வலைதள கணக்குகளும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆகவே தேர்தலில் வேட்பாளராக நிற்போரின் சமூக வலைத்தள கணக்குகள் பற்றிய விவரங்களை அவர்கள் மனுவில் குறிப்பிட வேண்டும். இதில் ஏதேனும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் இருக்கும் எனில் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த தேர்தல் நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 1,593 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கூடுதல் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கூடுதல் வாக்குச்சாவடிகள் உடன் சேர்த்து இந்த முறை 1,618 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை தேவையின் அடிப்படையில் அதிகரிக்கலாம். மேலும் மாவட்டத்தில் இதுவரை மூன்று வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை என்றும், 200 வாக்குச்சாவடிகள் பதற்றத்திற்கு உள்ளானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அவ்விடங்களில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு தேர்தல் விதிமுறைகள் கடைபிடிக்கப்படும். இவ்வாறு அவர் இன்றைய பேட்டியில் கூறினார். பேட்டியின் போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் ,மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன்,சார் ஆட்சியர் பயிற்சி அனு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர் .

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!