வேதாளை கிராமத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வேதாளை கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ்த லைமை வகித்தார். இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அன்வர்ராஜா முன்னிலை வகித்தார்

இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன்பே சியதாவது: பொது சுகாதாரத் துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேதாளை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையமானது மக்கள் வசதிக்காக வேதாளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிக கட்டடத்தில் இயங்கும். நிரந்தர கட்டடம் கட்ட ரூ.69 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் சிரமமின்றி வந்து செல்ல வசதியாக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைவில் புதிய கட்டடம் கட்டப்படும்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளி, புற நோயாளி பிரிவுகள், அவசர சிகிச்சை பிரிவு, தாய் சேய் நல சிகிச்சை உள்ளிட்ட வசதிகள், ரத்தம், சர்க்கரை, ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ள ஆய்வக வசதி உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.5.50 கோடியில் காந்த அதிர்வலை வரைவு ஸ்கேன் நவீன இயந்திரம் மக்கள் பயன்பாட்டிற்கு சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மாவடடத்தில் உள்ள இளைஞர்கள் நலனுக்காக எனது முயற்சியில் அரசு சட்டக்கல்லூரி செயல்படுத்தப்பட்டுள்ளது.

இராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் பஅரசு கலைக்கல்லூரி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பேசினார். ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் குமரகுருபரன், துணை இயக்குநர்கள் சாதிக்அலி (காச நோய் மருத்துவம்) ரவிச்சந்திரன் (தொழுநோய் மருத்துவம்), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உச்சிப்புளி வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன், டாக்டர்கள் ராஜா ஜவகர்லால் (மண்டபம்), பாலசுப்ரமணியன் (வேதாளை), வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன், சுகாதார ஆய்வாளர் கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..