Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க விவசாயிகள் சார்பில் தேர்தல் ஆலோசனைக்கூட்டம்..

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க விவசாயிகள் சார்பில் தேர்தல் ஆலோசனைக்கூட்டம்..

by ஆசிரியர்

அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகளின் கோரிக்கையை முன் வைத்து போட்டியிடுவதற்கான ஆலோசனை கூட்டம் 09.03.19 இன்று காலை 11.மணியளவில் திருச்சியில் நடைபெற்றது.

விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளான விவசாய விளை பொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்குதல், விவசாயிகள் வாங்கிய அனைத்து வங்கி கடன்களையும் தள்ளுபடி செய்தல், இந்தியா முழுவதும் உள்ள நதிகளை இணைத்தல்,60 வயது நிறைந்த விவசாயிகளுக்கு மகன், மகள் மற்றும் பட்டா நிலம் இருந்தாலும் மாத ஓய்வூதியம் வழங்குதல், விவசாயிகளுக்கு தனிநபர் இன்சூரன்ஸ் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நிறைவேற்றி தர யார் உறுதி கூறுகின்றனரோ, அவர்களுக்கே தேர்தலில் ஆதரவளிக்கவும், கோரிக்கையை ஏற்க மறுப்பவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது பற்றியும் அனைத்து விவசாயிகள் சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றுகூடி ஆலோசிக்கும் ஆலோசனை கூட்டம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில சட்ட ஆலோசகர் S. முத்துகிருஷ்ணன் B.Sc. B.L., அவர்களின் தலைமையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் P. அய்யாக்கண்ணு B.A. B.L., தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டுஇயக்க தலைவர் தெய்வசிகாமனி, பொதுச்செயலாளர் ராமாகௌண்டர், பொருளாளர் சேரன், பாலகிருஷ்ணன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஜான் மெல்கியோராஜ், கோட்டத்தூர் பெரியசாமி, பூபாலன், சங்க செய்தித்தொடர்பாளர் பிரேம்குமார், போராட்ட குழு தலைவர் வீரப்பூர் ராமலிங்கம், பொன்னுசாமி, மாவட்ட தலைவர்கள் அரியலூர் ஆண்டவர், புதுக்கோட்டை ரவி, ஐயப்பன் ஆகியோர்களின் முன்னிலையில் 09.03.2019 சனிக்கிழமை காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெற்றது.

கூட்ட முடியில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகள் தம் கோரிக்கையை முன்னிறுத்தி போட்டியிடுவதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!