நவீன விவசாயத்தில் சாதனை படைக்கும் பெண் விவசாயி…தன்னம்பிக்கைக்கு இவர் ஒரு முன்னுதாரணம்..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுடில் சாம்பார் வெள்ளரி விவசாயத்தில் அதிக மகசூல் எடுத்து சம்பாதித்து சாதித்து காட்டிய பெண், வெளியூர் வியாபாரிகளும் போட்டி போட்டு வந்து வாங்கி செல்கின்றனர்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவர் மனைவி பிரவீணா இயற்கையாகவே விவசாயத்தில் ஆர்வமுள்ள இவர் 25 செண்டு இடத்தில் ஒரு முறை வலைகளிலான கூடாரம் (பசுமை குடில்) அமைத்து வருடம் முழுவதும் தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றார்.

கேரளாவின் காய்கனி தேவையில் பெருமளவு பூர்த்தி செய்யும் திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தையில் வெளிநாட்டு சாம்பார் வெள்ளரி விதைகள் வாங்கி நட்டுள்ளார் பிரவீணா. இதற்கு சொட்டு நீர்ப்பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுகிறார். தனக்கு ஒரே ஒரு பெண் உதவியாளரை மட்டும் வைத்துக் கொண்டு பராமரிக்கிறார். மருந்து தெளிப்பதும் கொடிகளை பராமரிப்பதும் களைகளை பிடுங்வது என காய்கள் பறிப்பது வரை அணைத்து வேலைகளையும் பிரவீனா தன் உதவியாளருடன் தான் செய்து வருகின்றார்.

சரியான பராமரிப்பினால் நடவு செய்து 35 -நாட்களில் சாம்பார் வெள்ளரி கொத்து கொத்தாக காயத்து தொங்குகிறது. இரண்டுபேரும் பறித்து எடை போட்டு பெட்டியில் அடைத்து லாரிகளில் ஒட்டன்சத்திரம் மார்கெட் க்கு அனுப்புகின்றனர்.

பின்னர் அவைகள் கேரளா வியாபாரிகளால் விரும்பி வாங்கி செல்லப்படுகிறது. கேரளாவில் ஹோட்டல்களிலும், அழகு நிலையங்களிலும் அதிக அளவில் விற்பனையாகிறது. அழகு நிலையங்களில் பெண்களின் கண்கள் மீது வைத்து குளிர்ச்சியூப்டி கண்கள் அழகாக மிளிர பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

பிரவீணா வீட்டு வேலைகளை முடித்துவிட்டு காலை உணவு செய்து வைத்துவிட்டு தனது வெள்ளரி விவசாய பணிகளுக்கு வந்து விடுகிறார். சரியாக 35 நாள்  கழித்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் என 1.5 – டன் காய்களைப் பறித்து வருகின்றார். சம்பள ஆள் மற்றும் செலவு குறைவு, தண்ணீர் தேவை குறைவு, என்பதாலும் விலையும் கிலோ 30-35 வரை விற்பனை ஆவதாலும் ஒருமுறை பயிர் செய்தால் 3 – முதல் 5 – இலட்சம் வரை இலாபம் கிடைப்பதால் விவசாயம் தங்கயின்றி நடக்கிறது.

மேலும் இந்த விவசாயம் 4 – மாதத்தில் முடிந்து விடுவதால் வருடத்தில் 4- முறை தொடர் விவசாயம் செய்வதால் நல்ல மகசூழ் மற்றும் வருமானம் கிடைப்பதால். இவரது வெற்றியை அறிந்த பலர் இவரிடம் நேரில் வந்து விவசாயம் பற்றி ஆலோசனை கேட்டு செல்கின்றனர்

பிரவீணா தான் பெற்ற லாபம் அனைவரும் பெறட்டும் என்று அனைவருக்கும் ஆர்வத்தோடு சொல்லித் தருகிறார். மேலும் தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் விவசாயிகள் பெரும் நஷ்டங்களை சந்தித்து வரும் நிலையில் சுயமாக அரசு மானியத்துடன் பசுமை குடில் எனப்படும் நவீன விவசாயத்தை குறுகிய நிலப்பரப்பில் அதிக இலாபத்துடன் தனி ஒரு பெண்ணாக சாதித்து வரும் பிரவீனா இன்றை உலகின் சாதனைப் பெண் ஆவார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..