பயிர் காப்பீடு கோரி காத்திருப்பு போராட்டம்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் 2017-18ஆம் ஆண்டில் சம்பா பருவத்தில் நெல் பயிருக்கு பதிவு செய்த 1,52,930 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைவில் வழங்குவதற்கு விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை பலமுறை வலியுறுத்தியதின் பெயரில் அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும்
வகையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர்காப்பீட்டுத் தொகையை பெற்றுத்தரும் நோக்கத்துடன் இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்துடன் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தியதின் பலனாக முதல் கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.42. 68கோடி இழப்பீட்டுத் தொகையை இந்திய வேளாண் காப்பீட்டுக்  கழகம் ஒப்பளிப்பு செய்துள்ளது. ஒரு வாரத்திற்குள் இத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம் உறுதியளித்துள்ளது. இரண்டாம் கட்டமாக ரூ. 131.92 கோடி இழப்பீட்டுத் தொகைக்கான ஒப்பளிப்பு மார்ச் 7 இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்தின் தலைமை அலுவலகத்தால் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு  2017-18ஆம் ஆண்டில் சம்பா நெற்பயிருக்கான இழப்பீட்டுத் தொகை, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 175 கோடி அளவுக்கு மார்ச் 12 க்குள் அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு  வைக்கப்பட்டுவிடும்.  மூன்றாம் கட்டமாக எஞ்சிய பகுதி விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை மார்ச் 15 க்குள் வழங்குமாறு இந்திய வேளாண்  காப்பீட்டுக் கழகத்தை அரசு வலியுறுத்தியுள்ளது. அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் பயனாக நெற்பயிரை காப்பீடு செய்த விவசாயிகளுக்கான உரிய இழப்பீட்டுத் தொகை இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்தால் விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் 2017 – 18 க்கு பயிர் காப்பீடு இழப்பீடு வழங்காததை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம  திருவாடானை அருகே கைகாட்டி ( சின்ன கீரமங்கலம்) சாலை அருகே 2000 விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image