Home செய்திகள் வெம்பூர் அரசு ஆரம்பப் பள்ளிக்கு கிராம மக்கள் சார்பில் கல்வி சீர் வழங்கும் விழா..

வெம்பூர் அரசு ஆரம்பப் பள்ளிக்கு கிராம மக்கள் சார்பில் கல்வி சீர் வழங்கும் விழா..

by ஆசிரியர்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வெம்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 82 மாணவ, மாணவியர்களுக்கு படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக அ.கிருஷ்ணவேணி உள்ளார். இப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக ஏ.ராமலட்சுமி தலைமையில் 20 பேர் கொண்ட குழு செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், பள்ளி தேவையானவற்றை உறுப்பினர்கள் கேட்டுள்ளனர். அதற்கு ஆசிரியர்கள் பள்ளி மற்றும் மாணவ, மாணவியர்களின் தேவைகள் குறித்து தெரிவித்தனர்.

இதையடுத்து பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராமலட்சுமி, உறுப்பினர்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, பள்ளிக்கு தேவையானவை குறித்து எடுத்து கூறினார். கிராம மக்கள் ஆர்வமுடன் வந்து தங்களால் இயன்ற பொருட்களை வாங்க உதவினர். இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வாங்கினர். இதனை மகளிர் தினமான இன்று காலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்கள் ஊர்வலமாக கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக கல்வி சீர் பொருட்கள் கைகளில் ஏந்தி சென்றனர். பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஜி.சரளா, தலைமை ஆசிரியர் அ.கிருஷ்ணவேணி ஆகியோரிடம் பொருட்களை ஒப்படைத்தனர். ஆசிரியர்கள் எம்.கலையுடையார், டி.அருணாசல சுந்தரம், ஆர்.பத்மசெல்வி, வட்டார அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர் ஏ.லட்சுமி, கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!