Home செய்திகள் முன்னறிவிப்பு இல்லாமல் எத்தனால் பெட்ரோல் விற்பனை – தண்ணீர் கலந்து விற்பதாக மதுரையில் பரபரப்பு.. அரசு அனுமதியா??..

முன்னறிவிப்பு இல்லாமல் எத்தனால் பெட்ரோல் விற்பனை – தண்ணீர் கலந்து விற்பதாக மதுரையில் பரபரப்பு.. அரசு அனுமதியா??..

by ஆசிரியர்

உலகம் முழுவதும் சுற்றுபுற சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்தும் விதமாக எதனால் பெட்ரோல் பல நாடுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் அந்நாடுகளில் முறையான அறிவிப்புடன் மக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

ஆனால் மதுரையில் அமைந்துள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் விற்பனையை தொடங்கியதால் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக கீழை நியூஸ் நிருபர் அந்நிறுவனத்தின் மேலாளரிடம் எதனால் பெட்ரோல் பற்றிய விபரம் கேட்ட பொழுது, இது சம்பந்தமாக கூகுளிள் தேடி பாருங்கள் விபரம் கிடைக்கம் என கூறியது மிகவம் ஆச்சரியம். பொருளை விற்கும் நிறுவனத்தின் பொறுப்பாளருக்கே விபரம் தொியவில்லை என்றால் மற்ற விற்பனையாளர்கள் எப்படி பொது மக்களின் அச்சத்தை போக்குவார்கள்??. இதற்கான சரியான தீர்வை காண்பார்களா??

மேலும் 15% 85% சதவீத்தில் எதனால் கலக்கப்படும் பெட்ரோல் என்பது சுற்றுப்புற சூழலுக்க உகந்ததாக இருந்தாலும் 30 சதவீதம் குறைந்த மைலேஜ் தரக்கூடியதாகும். அதே போல் எதனால் பெட்ரோல் உபயோகத்தினால் என்ஜின் பழுதாகும் வாய்ப்பு கூடுதலாகும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இந்நிறுவனத்தில் எதனால் பெட்ரோலும் சாதராண பெட்ரோல் விலைக்கே விற்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த விற்பனை அரசின் அனுமதியோடுதான் விற்கப்படுகிறதா?? இல்லையா என்பதும் புரியாத புதிர்தான்…

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!