Home செய்திகள் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வருங்கால குழந்தைகள் ஒன்றுகூடி திறமைகளை வெளிப்படுத்தும் மாபெரும் கொண்டாட்டம் (Off Springs Mega Meet )..

முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வருங்கால குழந்தைகள் ஒன்றுகூடி திறமைகளை வெளிப்படுத்தும் மாபெரும் கொண்டாட்டம் (Off Springs Mega Meet )..

by ஆசிரியர்

இராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர்மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வருங்கால குழந்தைகள் ஒன்றுகூடி திறமைகளை வெளிப்படுத்தும் மாபெரும் கொண்டாட்டம்  (Off Springs Mega Meet ) பள்ளி முதல்வர் திரு.S.நந்தகோபால் தலைமையில் நடைபெற்றதுவரவேற்புரை பள்ளி ஆசிரியை நுஷாரா நிகழ்த்தினார்.

பள்ளி முதல்வர் தனது தலைமையுரையில்எங்களது பள்ளியில் மழலைய ( K.G.) முதல்பன்னிரெண்டாம் வகுப்பு மாணர்வர்கள் வரைகாலை வழிப்பாட்டுக் கூட்டத்தை  நடத்த அனுமதித்து அனைவரையும் மேடை நடுக்கத்தை நீக்கி ஒவ்வொரு மாணவனின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகவே அமைகிறது. மேலும் பள்ளியில் ந்டைபெறும் அனைத்து விழாக்களிலும்மாணவர்களே விழா தொகுப்புரையைவழங்கிகிறார்கள் என தெரிவித்தார்.

U.K.G மாணவர்களுக்கிடையே குறிப்பிட்ட மணித்துளிகளுக்குள் ஓவியம் வரையும் போட்டி நடத்தப்பட்டு  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  Pre.K.G ாணவர்களுக்கிடையே உருவங்கள் மற்றும் எண்கள் சேர்க்கும் போட்டியில் குறிப்பிட்டமணித்துளிகளுக்குள் சேர்த்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பல்வேறு வண்ண நிறங்களில் உடைஅணிந்தும் அதே வண்ண ரிப்பனை கையில்பிடித்தும் ஆடிப்பாடி ஒவ்வொரு வண்ணங்களின் சிறப்பையும் எடுத்துரைத்தனர்

பள்ளியில் படிக்கும் L.K.G மழலையர்கள்தங்களை பறவைகளாகவும் மேலும் நாம்பயன்படுத்தும் பொருட்களாக அதன் வடிவில்வந்து அந்தந்த வடிவத்தின் சிறப்புகளை ஆடிப்பாடி வெளிப்படுத்தினர். மேலும் திருக்குறள் ஒப்பிவிக்கும் போட்டி வைத்துதிறம்பட ஒப்பித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பள்ளியில் படிக்கும் மழலையர்களின் பெற்றோர்களுக்கு தங்களின் மழலையர்கள் பள்ளியில் பேசிய பேச்சுக்களை ஒலிப்பெருக்கியின் மூலம் ஒலி பரப்பி அதுயாருடைய மழலைய பேச்சு என கண்டுபிடிக்க பெற்றோர்களுக்கு போட்டி வைத்து பெற்றோர்களை மகிழ்விக்க செய்தன.

Pre.K.G மழலையர்கள் கண்களை கட்டி அவர்களின் பெற்றோர்களை ஒன்றாக அமரவைத்து மழலையர்கள் தங்களின் பெற்றோர்களின் கை, முகத்தை தடவி பார்த்து சரியாக தங்களின் பெற்றொர்களை அடையாளம் கண்டுபிடிக்கும் நிகழ்ச்சிநடபெற்றது.

இது போன்ற மழலையர்கள் பள்ளியில் தங்களின் தனித்திறனை வெளிப்படுத்தியபல்வேறு நிகழ்ச்சியை கண்டு கழித்து ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களின் மழலையர் செயல்பாட்டை கண்டு மகிழ்ந்துபாரட்டினர்நன்றியுரையை பள்ளி ஆசிரியை சிவபாலன் வழங்கினார் . விழா தொகுப்புரையை பள்ளி மழலையர்கள்முஹம்மது அஹ்சன் மற்றும் ஹாஸினிஆகியோர் சிறப்பாக வழங்கினர்.    

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!