Home செய்திகள் இராமநாதபுரத்தில் ரூ.128.58 கோடி மதிப்பில் கூட்டுறவு சங்க புதிய கட்டிடங்கள் , வங்கி கிளைகள் திறப்பு..

இராமநாதபுரத்தில் ரூ.128.58 கோடி மதிப்பில் கூட்டுறவு சங்க புதிய கட்டிடங்கள் , வங்கி கிளைகள் திறப்பு..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பாக ரூ.128.58 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்கள், கூட்டுறவு வங்கி கிளைகளை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் திறந்து வைத்தார்.

கூட்டுறவுத் துறை மூலம் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் வங்கி பணிகளுக்காக கூடுதல் கணினிகளுடன் நவீனப்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் (முதல் தளம்) சிகில்ராஜ வீதி பகுதியில் ராமநாதபுரம் கூட்டுறவு நகர் வங்கிக்காக ரூ.39.58 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டடம், பரமக்குடி அருகே வெங்கடாங்குறிச்சியில் ரூ.39 லட்சம் மதிப்பில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்க தானிய சேமிப்புக் கிடங்கு, திருப்பாலைக்குடியில் நடந்த விழாவில் தலா ரூ.15 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் நிதியில் மத்திய கூட்டுறவு வங்கி திருப்பாலைக்குடி, பெருநாழி கிராமங்களில் புதிய வங்கி கிளைகளை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது: கூட்டுறவுத் துறை மூலம் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு 30 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. தலா ரூ.15  லட்சம் நிதியில் திருப்பாலைக்குடி, பெருநாழி கிராமங்களில் புதிய வங்கி கிளைகள் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.  மத்திய கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மட்டுமல்லாது கால்நடை வளர்ப்பு, சொட்டுநீர் பாசனம், ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் போன்ற பல்வேறு விதமான கடனுதவிகள், வீட்டுவசதி  கடன், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன், தாட்கோ, டாம்கோ போன்ற அரசு திட்டங்களின் கீழ் கடனுதவிகள், பணிபுரியும் மகளிருக்கான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வங்கி கிளைகள் அனைத்தும்  கணினிமயமாக்கப்பட்டு வணிக வங்கிகளுக்கு நிகராக இணைய பண பரிமாற்றம், மின்னணு  பண பரிமாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு தங்களது வங்கி கணக்கில் மேற்கொள்ளப்படும் பண பரிமாற்றம் தொடர்பாக குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படுகிறது. பரமக்குடி பகுதியில் துவக்கி வைக்கப்பட்டுள்ள 50 மெட்ரிக் டன் கொள்ளளவு  கொண்ட தானிய சேமிப்பு கிடங்கானது இப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என பேசினார்.

கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ப.மு.முருகேசன், துணை பதிவாளர்கள் ச.கணேசன், வ.வெங்கடாசலபதி, மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் எஸ்.பிரான்சிஸ், ராமநாதபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் ஆர்.எஸ்.ராமமூர்த்தி, துணைத் தலைவர் லோகநாதன், பரமக்குடி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் எம்.கே.ஜமால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!