Home செய்திகள் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்க தேர் இயங்காததால் ஒரு கோடிக்கு மேல் வருவாய் இழப்பு .. பின்னனி என்ன??..

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்க தேர் இயங்காததால் ஒரு கோடிக்கு மேல் வருவாய் இழப்பு .. பின்னனி என்ன??..

by ஆசிரியர்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2007ம் ஆண்டு பக்தர்களின் வசதிக்காக பல கோடி செலவில் தங்கத்தேர் செய்யப்பட்டது. இந்த தேருக்கு பல ஊர்களை சேர்ந்த தொழிலதிபர்கள் நன்கொடையும் வழங்கினார்கள். பக்தர்கள் நேர்த்தி கடனாக தங்கத்தேர் இழுப்பது வழக்கம். கோயில் நிர்வாகத்தின் சார்பில் தேர் இழுக்க கட்டணமாக ₹.2000/- வசூலிக்கப்படுகின்றது. இந்த தேர் இழுப்பதன் மூலம் கோயில் நிர்வாகத்திற்கு ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும்.

ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டித் தரும் தங்கத்தேர் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக இயங்காமல் இருப்பதும் தேரில் உள்ள மணிகள் சிலவற்றை காணவில்லை எனவும் இதேபோல் தேரில் சில இடங்களில் தங்க முலாம் கறுத்து காணப்படுவதாலும் பல்வேறு சந்தேகங்களை எழும்புவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் கூறுகையில் பக்தர்களிடம் தரிசனத்திற்கு கட்டணம் வசூல் செய்யும் கோயில் நிர்வாகம் அதிக வருவாய் வரக்கூடிய தங்கத் தேரை இயக்காமல் பூட்டி வைத்திருப்பது குறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்ட போது மராமத்து பணிக்காக இயக்கப்படாமல் இருப்பதாக கூறுகிறார்கள், இந்த தங்க தேரை இயக்கி இந்த வருமானம் மூலம் அனைவருக்கும் கட்டணமில்லா தரிசனம் வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

செய்தி வி.காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!