Home செய்திகள் கீழக்கரை நகராட்சியின் ஏதோ சதிகாரப்போக்கை கண்டித்து சமூக அமைப்புகள் சார்பாக வால்போஸ்டர் மற்றும் துண்டுபிரசுரம்..

கீழக்கரை நகராட்சியின் ஏதோ சதிகாரப்போக்கை கண்டித்து சமூக அமைப்புகள் சார்பாக வால்போஸ்டர் மற்றும் துண்டுபிரசுரம்..

by ஆசிரியர்

கீழக்கரை நகராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன் தினசரி நாளிதழ்கள் மூலம் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் கூடுதல் வரி விதிப்பு விதிக்க இருப்பதாகவும் இது சம்பந்தமாக பொதுமக்கள் தங்கள் கருத்தை எழுத்து பூர்வமாக பதியலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.இதற்கான கால அவகாசம் 30 நாள் அளிக்கப்பட்டு இருந்தது .இதை ஆட்சோபனை செய்யும் முகமாக தமிழகத்தில் முதன்மையாக 592 பொதுமக்கள் ஆட்சோபனை மனுக்கள் அளித்து இருந்தனர்.

இந்த மனுக்களுக்கு பொதுமக்களுக்கு எந்த பதிலும் கூறாமல் தற்போது ஏதோசதிகாரப்போக்கில் கூடுதல் வரி விதித்து பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இது சம்பந்தமாக கீழக்கரை சமூக அமைப்புகளான, கீழக்கரை நகர் நல இயக்கம், சட்ட விழிப்புணர்வு இயக்கம், மக்க்ள் நல பாதுகாப்பு கழகம், மக்கள் டீம், இஸ்லாமிய கல்வி சங்கம்,  வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA), கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை மாத இதழ் சார்பாக நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து துண்டு பிரசுரம் மற்றும் வால்போஸ்டர் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், உயர் நீதிமன்ற வழக்கறிஞர். முஹம்மது சாலிஹ் ஹுசைன் கூறுகையில் “கீழக்கரை பொதுமக்களை மிரட்டும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் வரி கட்டாவிட்டால் உங்கள் வீடுகளில் நீதிமன்ற ஜப்தி நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் தின நாளிதழ்களில் செய்தி வெளியிட்டு கீழக்கரை வாழ் பொதுமக்களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது கீழக்கரை நகராட்சி நிர்வாகம். கீழக்கரை நகராட்சி வரலாற்றில் இது வரை எந்த ஒரு கமிஷனருமே செய்யாத வேலையை நகராட்சி மேலாளர் தனலெட்சுமி (கமிஷனர் பொறுப்பு) செய்துள்ளார். அநியாய வரி உயர்வை எதிர்த்து பொதுமக்கள் அனுப்பிய ஆட்சேபனை மனுக்களை எல்லாம் உதாசீனப்படுத்தி விட்டு, அலட்சியம் செய்து விட்டு, தான் தோன்றித் தனமாக அநியாய வரி உயர்வினை செய்தது சட்ட விரோதம். ஜனநாயக முறையில் சட்டத்தின் வழியில் ஆட்சேபனை மனு செய்த பொதுமக்கள் 592 பேரையும் உடனடியாக அழைத்து பேசி, புதிய வரி உயர்வினை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தில் முறையிட்டு உரிய பரிகாரம் தேடுவோம்.” என்று தெரிவித்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!