பெரும்பாலை அருகே அடிப்படை வசதிக்கு ஏங்கும் போடாராங்காடு மலை கிராம மக்கள்…

தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை பஞ்சாயத்திற்குட்பட்ட போடாரங்காடு மலை கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்த்தினர் வசித்து வருகின்றனர். இந்த மலை கிராமம் பெரும்பாலையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் மலை மற்றும் அடந்த வனப்பகுதிகளுக்கிடையே அமைந்துள்ளது. போடாராங்காடு மலை கிராம மக்கள் விவசாயம் மற்றும் கூலி வேலையை நம்பி உள்ளனர். இப்பகுதி மலைகிராம மக்கள் சுந்திரம் வாங்குவதற்கு முன்பிருந்தே தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் நாடு சுதந்திரம்பெற்றும் இது வரை இப்பகுதியில் வாழ்பவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். பள்ளி கல்லுõரி செல்லும் மாணவ,மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரும்பாலைக்கு அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கரடுமுரடான மண் சாலையில் வழியாக நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் இக்கிராமத்தில் மருத்துவமனை இல்லாததால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை வாகனங்களில் அழைத்து செல்ல போதிய சாலை வசதியில்லாததால், துணியில் யானைக்கட்டி தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது. சிலர் மருத்துவமனைக்கு அழைத்த செல்லும் போது வழியிலியே இறந்து போகும் பரிதாப நிலை உள்ளது. இதே போல் இக்கிராமத்தில் மழைக்காலங்களில் பாறை இடுக்குளிலிருந்து வரும் தண்ணீரைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். வறட்சியான காலங்களில் குடிநீருக்காக சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்துசென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது. இந்த கிராமத்திற்கு அரசு அதிகாரிகள் யாரும் வராததால், எந்த ஒரு அரசு சலுகைகளும் முழுமையாக கிடைக்காமல் உள்ளனர்.

மற்ற கிராம மக்கள் வாழ்வதை போல் இக்கிராம மக்களும் வாழ வேண்டும் என்றால் போடாரங்காடு கிராமத்திற்கு சாலை,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தும், அரசு அதிகாரிகள் நேரில் வந்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசு சலுகைகள் முழுமையாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போடாரங்காடு மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

தர்மபுரி செய்தியாளர் .என். ஸ்ரீதரன்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..