இராமநாதபுரத்தில் சுய உதவிக் குழு கூட்டமைப்பில் களஞ்சிய வட்டாரம் இணைப்பு விழா..

இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை பெண்கள் தங்கள் முன்னேற்றத்திற்காக சுய உதவி குழுக்கள் உருவாக்கி செயல்பட்டு வருகின்றனர் . முத்து நகர், சிகரம், சங்கமம், நெய்தல், பாலை வட்டாரங்களில் உள்ள 1,300 குழுக்களில் 20 ஆயிரம் உறுப்பினர்களின் குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர். சுயநிதி ஆதாரத்துடன் தற்சார்பு அமைப்புகளாக இருந்துவருகின்றன. வட்டாரங்களின் ஆலோசனை அமைப்பாக இருந்துவந்த ஒரு அறக்கட்டளை நிர்வாகத்தின் விரும்பத்தகாத செயல்பாடுகளால் இன்று முதல் அந்த அறக்கட்டளையின் அனைத்து விதமான தொடர்பு துண்டித்து தனி நிர்வாக அமைப்பாக அறிவிக்கப்படுகிறது.

இந்த 5 வட்டார களஞ்சிய உறுப்பினர்கள் எதிர்கால நலன் கருதி ஏசிஇ (அட்வான்ஸ் கம்யூனிட்டி எம்பவர்மென்ட்) பவுண்டேஷன் அழைக்கப்படுகிறது. இனி வட்டாரங்களின் நிர்வாகம் வெளிப்படையாக இருக்கும். சுய உதவிக் குழு உறுப்பினர்களின் தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்த தன்னாட்சி பெற்ற அமைப்பாக விளங்கும் என ஏசிஇ பவுண்டேஷன் நிர்வாகிகள் காயத்ரி, ராஜன் கூறினர்.

இந்த இணைப்பு விழாவிற்கு புதுகை மீனவ வட்டார நிர்வாகி வாசுகி தலைமை வகித்தார். சிகரம் வட்டார நிர்வாகி சண்முக வள்ளி முன்னிலை வகித்தார். ஐந்து வட்டாரங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், பணியாளர்கள், தலைவர்கள் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..