அமைச்சர் கடம்பூர் ராஜூ, தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் கதிரேச ஆதித்தன் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்..

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் கதிரேச ஆதித்தன் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் கதிரேச ஆதித்தன் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் அரோகரா.. அரோகரா… கோசத்துடன் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 10-ம் தேதி கொ டியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா காலங்களில் தினசரி காலை மற்றும் மாலையில் சுவாமியும், அம்பாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் இன்று காலையில் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விசுவரூப தீபாரானையும், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் தேரில் எழுந்தருளினார்.

முதலில் விநாயகர் தேர் புறப்பட்டு 4 ரதவீதிகளையும் சுற்றி நிலையை வந்து சேர்ந்தது. தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளிய தேரை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், மற்றும் கதிரேச ஆதித்தன் ஆகியோர் வடம்பிடித்து தொடங்கி வைத்தனர். இந்த தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை வந்து சேர்ந்தது. தேரோட்டத்தின் போது திரளான பக்தர்கள் அரோகரா.. அரோகரா.. கோசத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.

விழாவையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து, தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள், கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழாவிற்க்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி.முரளி ரம்பா உத்தரவின் பேரில், D.S.P. பாரத் தலைமையிலான போலீசார் சிறப்பாக செய்திருந்தனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..