வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் விளையாட்டு மைதானத்தை உடனே அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..

வேலூர் அடுத்த காட்பாடி அருகே விஐடி தனியார் பல்கலைக்கழக நிர்வாகம் அதன் அருகே உள்ளே 42 ஏக்கர் அரசு புறம்போக்கு தனக்கு மாற்றி தரும் படி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி 42 ஏக்கர் நிலத்தை விளையாட்டு மைதானமாக மாற்ற உத்தரவு யிட்டது.

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட அரசு நிலத்தை வருவாய் துறை ஆணையர் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அளந்து அறிக்கை அளிக்க கேட்டுக்கொண்டது.

அதற்கு ஆதரவு தெரிவித்தும் வேலூரில் அரசு விளையாட்டு மைதானத்தை மாவட்ட நிர்வாகம் உடனே அமைக்க வலியுறுத்தி வேலூர் பகுதி சமூக ஆர்வலர்கள் விளையாட்டு வீரர், வீரங்கனைகள் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் புதியதாக உருவாகி உள்ள ஊடக உரிமைக் குரல் சார்பில் தமிழன் வடிவேல், ராபர்ட்ராஜ், சிவக்குமார், ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..