இராமநாதபுரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்..

சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்தின் கீழ் அங்கண்வாடி பணியாளர்கள் மூலம்   மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகளுக்கு  பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் அறிக்கை. சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி  திட்டம் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புறம், பேரூராட்சி மற்றும்  நகராட்சி பகுதியில் 04.02.2019 முதல் அங்கன்வாடி பணியாளர்களைக் கொண்டு கைபேசி மூலம்  மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக்கணக்கெடுப்பு பணிகளில் 0-5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கருவுற்ற மற்றும்  பாலூட்டும் தாய்மார்கள், 11-18 வயதிற்குட்பட்ட வளரிளம் பெண்கள் ஆகியோரின் விவரங்களை  ஆதார் எண்ணுடன் கணக்கெடுக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. இக்கணக்கெடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..