ஒழிக்க வேண்டியது தீவிர”வாதம்” அல்ல… தீவிரவாத ”செயல்கள்”..

தீவிரவாதத்திற்கும் தீவிர வாத செயலுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. வாதம் என்பது நாம் நினைப்பதை நம்முடைய தீவிரமான வாதத்தால் மக்கள் மத்தியில் எடுத்துரைப்பது. அவ்வாதம் மக்களுக்க பயன் உள்ளதாக இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படும். அவ்வாதம் சமுதாயத்திற்கு பயனளிக்காத பட்சத்தில் முழுமையாக நிராகரிக்கப்படும். இச்செயலால் மக்களின் உயிருக்க எந்த பாதிப்பும் ஏற்படுத்த போவதில்லை. ஆனால் அந்த வாதத்தை மக்களிடன் திணிக்க முற்பட்டு அதை செயல்படுத்தும் பொழுதே அத்தீவிரவாத செயல் தலையெடுக்கிறது. இந்த தீவிரவாத செயலை நுனியிலேயே கிள்ளி எடுக்க வேண்டியது நம் அனைவருடைய கடமையாகும்.

இன்று இந்த தீவிரவாத செயலாரல் 50கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், என்ன காரணம் என்று அறியாமலேயே. அந்த ராணுவ வீரர்களில் குழந்தைக்கு தகப்பன், புதிதாக திருமணம் ஆனவர்கள், பெற்றோர்களை காப்பாற்றி வருகிறவர்கள் என பல்வேறு உயிர்கள் இந்த தீவிர வாத செயலுக்கு பலியாகி இருக்கிறது.
இந்த கொடூர செயலை யார் செய்திருந்தாலும் முச்சந்தியில் வைத்து சுட்டுத் தள்ள வேண்டியவர்கள். அது எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் செய்து இருந்தாலும் சரியே.. மனித உயிரை எடுப்பதற்கு யாருக்கும் கிடையாது. இன்று மதத்தின் பெயரால் மதம் பிடித்தும், ஜாதி பெயரால் வெறி பிடித்தும், மார்க்கத்தின் பெயரால் மூர்க்கத்தனம் பெருகியும் இன்றைய காலக்கட்டத்தில் பல் வேறு உயிர்கள் அநியாயமாக கொல்லப்படுவது மிகவும் வேதனைக்குரியது, வெட்கி தலைகுனிய வேண்டிய விசயம்.

ஆனால் அதையும் அரசியல் ஆதாயமாக்க துடிக்கும் அரசியல் கயவர்களும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள், தேவை என்றால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஒரு செயல் மற்றொரு செயலை மறக்கடிக்க என்பது போலவே இன்றைய அரசியல் சூழலில் பல்வேறு காரியங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றது. இன்று வரை ஜாதியின் பெயரால், காதலின் பெயரால் கொல்லப்பட்ட உயிர்களுக்கு விடை கிடைக்கவில்லை.

அன்று சுவாதியை கொன்றதாக கொல்லப்பட்ட ராம்குமார், சமீபத்தில் காதலித்து திருமணம் கொணடதால் உயிருடன் ஆற்றில் வீசி கொல்லப்பட்ட நந்தீஷ், ஸ்வாதி.  மதத்தின் பெயரால் கொலை செய்யப்ட்டு அரசியலாக்கப்பட்ட ராமலிங்கம் கொலை, நேற்று எதற்கென்றே தெரியாமல் கொல்லப்பட்ட 48 ராணுவ வீரர்கள். இவர்கள் கொலைக்கு எல்லாம் யார் காரணம்?? யாருக்கும் தெரியாது. ஆனால் முகமே தெரியாத, அடையாளம் தெரியாக நபர்கள் மீது இன்று வரை பழிதான் சுமத்தப்பட்டு அரசியல் சாயம்தான் பூசப்படுகிறதே தவிர காரணங்கள் கண்டுபிடிக்கப்படவும் இல்லை.. தீவிரவாத செயலும் வேரறுக்கப்படவும் இல்லை.

இப்பொழுது மக்கள் மத்தியில் எழும் சந்தேகம்.. ஒவ்வொரு கொலைக்கும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் ஜாதிகளும் மதங்களும் மார்க்கங்களும் அடையாளம் காட்டப்படுவது ஏன்?? நேற்று கொல்லப்பட்ட பகுதி அதிகமாக இராணுவ பாதுகாப்பு உள்ள பகுதி, 10 அடிக்கு ஒரு முறை சோதனைக்கு உட்படும் பகுதியில் எப்படி 150கிலோவுக்கு அதிகமுள்ள வெடிப் பொருட்கள்  உள்ளே வந்தது??. கொண்டு வந்த பின்னர் எப்படி ராணுவ கண்களுக்கு படாமல் புதைக்கப்பட்டது?? என்பதுதான். இது போன்ற சதிச் செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயமாக தண்டிக்ப்பட்ட ஆக வேண்டும். ஆனால் இதில் இறந்தவர்கள் ஒரு ஜாதியையோ, மதத்தையோ சார்ந்தவர்கள் அல்ல அல்லது ஒரு அரசியல் கட்சியை சார்நதவர்கள் அல்ல. இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் காஷ்மீர் நசீர் அஹமதும் உண்டுஅரியலூர் சிவச்சந்திரணும் உண்டு. இதை மறந்து விட வேண்டாம்…

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image