மதுரையில் தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் திருச்சி மாணவர்கள் பதக்க வேட்டை….

மதுரையில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது இதில் தமிழகம் மற்றும் பிற மாநிலத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிலம்ப போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் திருச்சியில் இருந்து காவலர் அரவிந்த் தலைமையிலான 5 மாணவர்களும் 5 மாணவிகளும் போட்டியில் கலந்து கொண்டனர்

இதில் முதலாவதாக நடைபெற்ற தனிசுற்றில் மஞ்சரி, நவசக்தி மற்றும் ஹரீஸ்வரன் ஆகியோர் தங்கமும் ராஜேஷ் நீதி வளவன் மற்றும் யோகேஷ்வரி வெள்ளி பதக்கமும் மேலும் சுகித்தா, சஞ்சீவிராஜன், ஸ்ரீமாலன் மற்றும் நந்தினி ஆகியோர் வெங்கல பதக்கமும் பெற்றனர்.

மேலும் இரண்டாவதாக நடைபெற்ற சிலம்ப சன்டை போட்டியில் எம்.பி.சுகித்தா, யோகேஷ்வரி , நவசக்தி மற்றும் ஹரிஷ் வரன் ஆகியோர் தங்கமும் மஞ்சரி, நீதி வளவன் , நந்தினி, ராஜேஷ் வெள்ளி பதக்கமும் மேலும் ஸ்ரீமாலன், சஞ்சீவி ஆகியோர் வெங்கல பதக்கமும் வென்றனர்.

திருச்சியில் இருந்து சென்ற பத்து மாணவ மாணவிகளும் போட்டியில் கலந்து கொண்டு ஆளுக்கு இரண்டு பதக்கங்களும் சான்றிதழையும் பெற்றது கலந்து கொண்ட அனைவராலும் பாராட்டப்பட்டது மேலும் காவலர் அரவிந்த் திருச்சியில் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து பதக்கத்தை தட்டி சென்றது கண்டு அனைவரும் பாராட்டினார்கள்.

கீழை நியூஸுக்காக:- ஜெ.அஸ்கர்

Be the first to comment

Leave a Reply