மதுரை ரயில் நிலையத்தில் வெயிலிலும், மழையிலும் காயும் இரு சக்கர வாகனங்கள்..

மதுரை ரயில் நிலையம் பிரதான நுழைவாயிலில் உள்ள இருசக்கர வாகன காப்பகம் எந்தவித வசதிகளும் இல்லாமல் இருசக்கர வாகனங்கள் வெயிலும் மழையில் இருக்கும் நிலை உள்ளது.

இதற்கு 12 மணி நேரத்திற்கு ₹.10/- கட்டணம்,  சைக்கிளுக்கு ₹.5/- கட்டணம் வசூல் செய்கிறார்கள். ஆனால் வசூலிக்கும் தொகைக்க ஏற்ற வசதிகள் செய்துள்ளாரகளா என ரயில்வே நிர்வாகம் கண்டு கொண்டதாக தெரியவில்லை. எந்தவித வசதியும் இல்லாமல் வாகன காப்பகம் செயல்படுவதை ரயில்வே நிர்வாகம் எப்படி அனுமதிக்கிறது என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. இதனால் வெயிலில் பெட்ரோல் எளிதில் கரைந்து விடும் நிலை, அதே போல் மழை நேரங்களில் வாகனம் சேரும் சகதியும் அலங்கோலமாக மாறிவிடுகிறது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

செய்தி வி.காளமேகம், மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..