Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இலங்கை தப்ப முயற்சி அகதிகள் 5 பேர் கைது புரோக்கர், டிரைவர் சிக்கினர்….

இலங்கை தப்ப முயற்சி அகதிகள் 5 பேர் கைது புரோக்கர், டிரைவர் சிக்கினர்….

by ஆசிரியர்

இராமேஸ்வரத்தில் நேற்று இரவு இரட்டை தாழை மூனீஸ்வரர் கடற்கரையில் இருந்து மர்மப்படகு மூலம் இலங்கை தப்ப முயன்ற அகதிகள் 5 பேர் உள்பட 7 பேர் பிடிபட்டனர்.  இராமேஸ்வரம்  சுங்கத்துறை அதிகாரிகள் தனுஷ்கோடி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரட்டை தாழை மூனீஸ்வரர் கோயில் வாசல் முன் பதிவெண் இல்லாத ஷேர் ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் ஆட்டோவை சோதனை செய்தனர். ஆட்டோவில் யாரும் இல்லாததால் சுங்கத்துறை அதிகாரிகள், கடற்கரைக்கு சென்று பார்த்தனர். அப்போது மர்மப் படகு மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்லவதற்காக கடற்கரையில் காத்திருந்தது தெரியவந்தது. 3 பெண்கள் உள்பட 5 அகதிகள், புரோக்கரான வழுதூர் ஆனந்த் ஆட்டோ டிரைவர் லோகநாதன் ஆகியோரை சுற்றி வளைத்து பிடித்து சுங்கத்துறை அலுவலகம் கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் விசாரணையில், கிளிநொச்சியில் இருந்து கடந்த 1997 ஆம் ஆண்டு அகதிகளாக தமிழகம் வந்து, மண்டபம் மறுவாழ்வு துறை அதிகாரிகள் விசாரணைக்கு பின், மதுரை ஆனையூர் அகதிகள் முகாமில் தங்கி உள்ளோம். அகதிகளை மர்மப்படகு மூலம் இலங்கைக்கு அனுப்பும் இடைத்தரகர் ஆனந்த் தங்களை தொடர்பு கொண்டு ரூ.25 ஆயிரம் கொடுத்தால் கிளிநொச்சிக்கு அனுப்பி வைப்பதாக கூறினர். இடைத்தரகர் வழுதூர் ஆனந்த், எங்களை தொடர்பு கொண்டு ராமநாதபுரம் வந்து இறங்க சொன்னார். அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் எங்களை (கணேஷ் 67, இவரது மனைவி சோமாலை 65, இவர்களது மகள்கள் குமுதினி 31, மலர் 28, மற்றும் ஜெகன் 10) ஏற்றி கொண்டு தனுஷ்கோடி இரட்டைதாழை மூனீஸ்வரர் கோயில் வழியாக அழைத்து வந்தார். படகிற்காக காத்திருந்தபோது. சிக்கிக் கொண்டதாக தெரிவித்தனர். விசாரணைக்கு பிறகு அகதிகள் 5 பேர் மற்றும் புரோக்கர், ஆட்டோ டிரைவர் என 7 பேர் தனுஷ்கோடி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!