Home செய்திகள் அமமுகவில் இணைய அதிமுகவுக்கு தங்க தமிழ்ச்செல்வன் அழைப்பு… தமிழக அரசின் கடனை பார்த்து பயமா இருக்கு என கலகலப்பு பேட்டி..வீடியோ..

அமமுகவில் இணைய அதிமுகவுக்கு தங்க தமிழ்ச்செல்வன் அழைப்பு… தமிழக அரசின் கடனை பார்த்து பயமா இருக்கு என கலகலப்பு பேட்டி..வீடியோ..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட அமமுக., அலுவலகம் திறப்பு மற்றும் பாராளுமன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பட்டணம் காத்தானில் நடந்தது. அமமுக., கொள்கை பரப்பு செயலாளரும், மண்டல பொறுப்பாளரும், தேனி மாவட்ட செயலருமான தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:

கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக., எந்த திட்டமும் கொண்டு வர வில்லை. நீட் தேர்வு, உதய் மின் திட்டம் மற்றும் தமிழக விவசாயத்தை பாதிக்கும் மத்திய அரசு திட்டங்களை எதிர்க்க தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லை. மத்திய அரசின் மிரட்டலுக்கு அதிமுக., அரசு அடிபணிந்துள்ளது என்பது தமிழக மக்கள் எண்ணம்.  வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக.,வுக்கும் அதிமுக., வுக்கும் தமிழக மக்கள் மிகப் பெரிய பாடம் புகட்டுவர்.

மத்திய அரசின் கெடுபிடிகளுக்கு அடிபணியாமல் துணிச்சலாக எதிர்த்து இருந்தால் அதிமுகவில் இருந்து நாங்கள் (அமமுக) பிரிந்து வந்திருக்க மாட்டோம். மோடியின் கட்டளைகளுக்கு வளைந்து போகும் போக்கு பிடிக்காமல் பிரிந்து வந்து நாங்கள் உண்மையான அதிமுகவினர் என நிருபித்துள்ளோம். கருத்து கணிப்பில் அமமுக வளர்ச்சி சிறப்பாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் கட்சி, இரட்டை சின்னம் எங்களிடம் வரும். ஆட்சியும் எங்களிடம் தான் வரும். 90 சதவீதம் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். நீங்கள் ( அதிமுக) மனம் திருந்தி எங்களிடம் வாருங்கள். இருவரும் சேர்ந்து அதிமுக., இரட்டை இலையை கையிலெடுத்து ஆட்சி செய்வோம். அதிமுக., அமமுக., மீண்டும் இணைய எனக்கு தெரிந்து வாய்ப்பில்லை. நாங்கள் தான் செல்வாக்கு மிகுந்த கட்சியாக உருவெடுத்துள்ளோம். அதிமுக., அரசின் அதிகார பலம் , பண பலம் நாடகம் தேர்தலில் தமிழக மக்களிடம் எடுபடாது. பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின் நல்ல செல்வாக்கு மிக்க கட்சியாக அமமுக வளர்ந்துள்ளது. பார்லி., தேர்தலில் மக்கள் விரும்பும் முடிவு எங்களுக்கு சாதகமாக உள்ளது. அதன் பிறகு தமிழகத்திற்கு நல்ல வளர்ச்சி உள்ளது. தமிழக பட்ஜெட் அறிவிப்பு படி  கடனை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கு. ரூ.4 லட்சம் கோடியை எட்டியுள்ளது. 2 ஆண்டுகளில் ரூ.48 ஆயிரம் கோடி கடன் வாங்கி என்ன வளர்ச்சி திட்டம் செயல்படுத்தினீர்கள். தொழிற்சாலை முதலீடுகளில் அரசுக்கு என்ன வருவாய்? தமிழக மக்களுக்கு வழங்கிய பொங்கல் பரிசு ரொக்கம் எங்கிருந்து கொடுத்தீர்கள்? கடனா? கஜானாவில் இருந்து எடுத்ததா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றும் ஆற்றல் மிக்க அரசாக செயல்பட தெரியவில்லை. மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் தலை ஆட்டும் அரசாக அதிமுக அரசு உள்ளது. பார்லிமென்ட் தேர்தல் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. இதற்கிடையில் பிரதமரை போட்டி போட்டு அதிமுக அமைச்சர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர். பாஜக.,வின் ஒரு அங்கமாக அதிமுக போய்விட்டது. ஜெயலலிதா இருந்தால் இதை செய்திருப்பீர்களா? மத்திய அரசை கண்டு நீங்கள் பயப்படுவதால் அதை வைத்து பாஜ., உங்களை மிரட்டி வருகிறது. இதனால் பாஜ., உடன் அதிமுக கூட் டணி வைத்தே ஆக வேண்டும். பார்லிமென்ட் தேர்தலில் பாஜ., அதிமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் மிகப் பெரிய பாடம் புகட்டுவர். நேர்மையாக உள்ள அமமுக.,வுக்கு மிகப் பெரிய வெற்றியை தமிழக மக்கள் கொடுப்பர் என்றார்.

அமைப்பு செயலாளர் இ.ஏ. ரத்தினசபாபதி, மருத்துவ அணி செயலாளரும், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான டாக்டர் எஸ்.முத்தையா, அமைப்பு செயலர்கள் ஜி. முனியசாமி ( சேமிப்பு கிடங்கு வாரிய முன்னாள் தலைவர்), வ.து. நடராஜன் (முன்னாள் அமைச்சர்), விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.இன்பத் தமிழன் (முன்னாள் அமைச்சர்), புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலர் பரணி இ.ஏ.கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் வ.து.ந.ஆனந்த் வரவேற்றார். எம் ஜி ஆர் மன்றத் தலைவர் கே.கே.சிவசாமி, அம்மா பேரவை செயலாளர் எம்.பி. ஜெயராஜ், மகளிரணி இணை செயலர் எஸ். கவிதா சசிகுமார் (ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் தலைவர் .பொறுப்பு), முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் கே.முருகன், ராமேஸ்வரம் நகராட்சி முன்னாள் தலைவர் ஏ.அர்ச்சுணன், மருத்துவ அணி துணை செயலர் டாக்டர் எம். கபிலன், மீனவரணி இணை செயலர் ஆர். கணேஷ் குமார் உள்பட பலர் பேசினர். மாவட்ட அவைத் தலைவர் கே.ஹரிதாஸ் நன்றி கூறினார்.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட வர்த்தக அணி செயலர் தவமுனியசாமி தீர்மானங்கள் வாசித்தார். அமமுக., ஜெ., பேரவை செயலர் மாரியப்பன் கென்னடி, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலர் பரணி கார்த்திகேயன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் ஆர்.கே.ரம்லி, ஒன்றிய செயலர்கள் முத்தீஸ்வரன் (ராமநாதபுரம் ), ஜி.எம். ஸ்டாலின் ஜெயச்சந்திரன் (மண்டபம்), முத்துச் செல்வம் ( திருப்புல்லாணி), ரத்தினசபாபதி ( திருவாடானை), பச்சைக்கண்ணு (சாயல்குடி) , பத்மநாபன் (கடலாடி), மாவட்ட இளைஞர் பாசறை செயலர் டி.ஆர். விசுவநாதன், மாவட்ட மீனவரணி துணை செயலர் முகமது அலி ஜின்னா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் எம்.பூபதி குமார், மாவட்ட மாணவரணி துணை தலைவர் ஜி.ரவீந்திரன், மாவட்ட விவசாய அணி செயலர் கணேசன், மாவட்ட மகளிரணி இணைச் செயலர் இந்திரா மேரி (ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர்), ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் செல்வம், நகர் செயலர்கள் எம்.களஞ்சிய ராஜா (மண்டபம்). கே.ஆர்.சுரேஷ் (கீழக்கரை), ரஞ்சித் குமார், மூத்த உறுப்பினரும், மாவட்ட இளைஞரணி நிர்வாகி மண்டபம் எம்.ஜி. கருணாகரன், ராமநாதபுரம் ஒன்றிய ஜெ., பேரவை செயலர் தினகரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவ செயலர் சூரிய மணிகண்டபிரபு, ஒன்றிய பொருளாளர் செல்வம், வக்கீல் ரகு, மண்டபம் ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலர் மைக்கேல் ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரந்தாமன், மண்டபம் பேரூராட்சி சிறுபான்மை பிரிவு இணை செயலர் சித்திக்கான், எம்.ஆர். முத்துராமலிங்கம், எம்.வழிவிட்டான், கருப்பசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!