கீழக்கரை ஏர்வாடி சாலையில் விபத்து ..

கீழக்கரை ஏர்வாடி முக்கு ரோடு வளைவு பகுதியில் இன்று (11/02/2019) தூத்துக்குடி நோக்கி சென்ற லாரியினால் விபத்து. இராமநாதபுரத்தில் இருந்து வந்த லாரியின் உள்ளே  கனரக HITACHI இயந்திரத்தை கொண்டு சென்ற  பொழுது வளைவில் திரும்பும் இடத்தில் எதிர்பாராத விதமாக லாரியின் மீதிருந்த ஹிட்டாச்சி மிசின், முக்கு ரோடு ஆட்டோ ஸ்டாண்ட்டில் நின்றிருந்த ஆள் இல்லாத ஆட்டோ மீது விழுந்தது.

அவ்விடத்தில் நின்றிருந்த வேறொரு ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தி என்பவருக்கு சிறு காயமும், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த ஒரு பெண்ணுக்கும் காயமும் ஏற்ப்பட்டது. இவ்விபத்தில் காயமடைந்த இருவரும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக கீழக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..