தூத்துக்குடி மாவட்ட தேசிய பசுமைப்படை பள்ளிகளுக்கு செயல்பாட்டு நிதியாக 250 பள்ளிகளுக்கு ரூ.12.50 லட்சம் நிதி..

தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை, தேசிய பசுமைப்படை சார்பில் தூத்துக்குடி மாவட்ட தேசிய பசுமைப்படை பள்ளி ஒருங்கினைப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமில் பள்ளி செயல்பாட்டு நிதியாக ரூ.12.50 லட்சம் வழங்கும் விழா கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேசிய பசுமைப்படை பள்ளி ஒருங்கினைபாளர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தேசிய பசுமைப்படை செயல்பாடுகள் குறித்த பயிற்சி வழங்கபட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேசிய பசுமைப்டை பள்;ளிகளுக்கு செயல்பாட்டு நிதியாக ஒரு பள்ளிக்கு ரூ.5000 வீதம் 250 பள்ளிகளுக்கு ரூ.12.50 லட்சத்திற்கான ஆணை வழங்கப்பட்டது. பள்ளி பசுமைப்படை ஒருங்கினைப்பாளர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் துணிப்பை வழங்கப்பட்டது. பின்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து வரைந்த பள்ளி மாணவர்களின் ஓவிய கண்காட்சி நடைபெற்றது.

பயிற்சி முகாமிற்கு மாவட்ட கல்வி அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்தார். கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ஆசியாபார்ம்ஸ் பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சீனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கினைப்பாளர் பாலகணேசன் அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி வனச்சரகர் சிவராம் கலந்து கொண்டு மரக்கன்று உற்பத்தி தேசிய பசுமைப்படை செயல்பாடுகள் குறித்த பயிற்சி கையேடுகளை வெளியிட்டு தேசிய பசுமைப்படை பள்ளி செயல்பாட்டு நிதி ரூ.12.50 லட்சத்திற்கான உத்திரவினை வழங்கி பேசினார்.

பயிற்சி முகாமில் ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முனைவர்.ராமசாமி பருவ நிலை மாற்றத்தின் முக்கியத்துவம் குறித்தும், சுற்றுச்சூழல் மன்ற மாவட்ட ஒருங்கினைப்பாளர் பென்சர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் சூரியபிரம்மன் பல்லுயிர் பெருக்கம் குறித்தும், திருவைகுண்டம் சமூக தணிக்னை வட்டார வள அலுவலர் முத்துமுருகன் தூய்மை பாரத இயக்கம் குறித்தும் பயிற்சி அளித்தனர்.

முகாமில் ரோட்டரி சங்க செயலாளர் ரவிமாணிக்கம், பள்ளி கல்வி துணை ஆய்வாளர் செல்லகுருசாமி உள்பட 250 பள்ளிகளிலிருந்து தேசிய பசுமைப்படை ஒருங்கினைப்பாளர்கள் 250 பேர் கலந்து கொண்டனர். முடிவில் இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முகராஜ் நன்றி கூறினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..