கோவில்பட்டி கல்லூரி மற்றும் பள்ளிகளில் வளர் இளம்பெண்களுக்கான சுகாதார கல்வி பயிற்சி முகாம்..

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில், வளர் இளம் பெண்களுக்கான சுகாதார கல்வி பயிற்சி முகாம் கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி மற்றும் நாடார் நடுநிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.

எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் நடந்த பயிற்சி முகாமிற்கு ரோட்டரி சங்கத்தலைவர் ஆசியாபார்ம்ஸ் பாபு தலைமை வகித்தார். கல்லூரி செயலர் கண்ணன் முன்னிலை வகித்தார், கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். வளர் இளம்பெண்களுக்கான சுகாதார கல்வி பயிற்சி முகாமை ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் சம்பத்குமார் துவக்கி வைத்தார்.

வளர் இளம்பெண்களுக்கான பெண் உடல் மற்றும் உரிமை பாதுகாப்பு, மனநல மேம்பாடு, மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்து டாக்டர்.முனைவர்.கல்யாணி பயிற்சி அளித்தார். இதைபோல் கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி முகாமில் பள்ளி செயலர் கண்ணன், பள்ளி தலைமையாசிரியர் செல்வி உள்பட மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க செயலாளர் ரவிமாணிக்கம் நன்றி கூறினார்.

Be the first to comment

Leave a Reply