தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம்..

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு B.A. B.L., தலைமையில் திருச்சி அலுவலகத்தில் 09.02.2019 இன்று நடைபெற்றது.

செயற்குழு கூட்டத்தில் விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய அனைத்து வங்கி கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், இந்தியா முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும், 60 வயது நிறைந்த விவசாயிகளுக்கு மகன், மகள் மற்றும் பட்டா நிலம் இருந்தாலும் மாத ஓய்வூதியம் ரூ.5,000/- வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்மொழியப்பட்டது.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இக்கோரிக்கைகளை நிறைவேற்றி தர யார் உறுதி கூறுகின்றனரோ, அவர்களுக்கே தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு எதிர்ப்பான பிரசாரங்களையும் 7 யூனியன் பிரதேசங்களிலும் 29 மாநிலங்களிகலும் விவசாயிகளை ஒன்றிணைத்து பிப்ரவரி 15ல் – லக்னோ, மார்ச் 2ல் – பிலிப்பட், மார்ச் 28, 29ல் – தலைநகர் டெல்லியில் மாபெரும் விவசாயிகள் ஊர்வலம் மற்றும் விவசாயிகளின் பிரச்சார பயணம்  நடைபெறுவது குறித்து முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..