Home செய்திகள் டிஎன்சி என்பதை டிஎன்ட்டி என பெயர் மாற்ற ராமநாதபுரத்தில் கருத்து கேட்பு கூட்டம்….

டிஎன்சி என்பதை டிஎன்ட்டி என பெயர் மாற்ற ராமநாதபுரத்தில் கருத்து கேட்பு கூட்டம்….

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம்  சீர்மரபினர் சமுதாயத்தினர் (டிஎன்சி) என்பதை சீர்மரபினர் பழங்குடியினர் (டிஎன்ட்டி) என பெயர் மாற்றம்  செய்வது தொடர்பான ஆய்வுக்குழு கூட்டம்  வருவாய் நிர்வாக முதன்மைச் செயலர் டாக்டர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. சீர்மரபினர் சமுதாயத்தினர் (டிஎன்சி) என்பதை சீர்மரபினர் பழங்குடியினர் (டிஎன்ட்டி) என பெயர் மாற்றம் செய்யக் கோரி வரப்பெற்ற கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பாக வருவாய்  நிர்வாக முதன்மைச் செயலர் டாக்டர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் ஆய்வுக்குழு  கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் வருவாய் நிர்வாக இணை ஆணையர் எம்.லக்ஷ்மி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர்  எம்.மதிவாணன்மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இயக்குநர் வா.சம்பத், மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு சீர்மரபினர் நலச்சங்கங்களை சார்ந்த  பிரதிநிதிகள் கலந்து கொண்டு சீர்மரபினர் சமுதாயத்தினர் (டிஎன்சி) என்பதை சீர்மரபினர் பழங்குடியினர்  (டிஎன்ட்டி) என பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக தங்கள் கருத்துகளை தெரிவித்ததோடு  எழுத்துப்பூர்வமாக கோரிக்கை மனுக்களை வழங்கினர். குழுத்தலைவர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் இயக்குநர் நிர்வாக  முதன்மைச் செயலர் பேசுகையில்: தமிழக முதல் வரிடம் 2018 அக்.25 இல் சீர்மரபினர் தங்களது  சமுதாயத்தை சீர்மரபினர் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழக முதல்வர், துணை முதல்வர் சமுதாய மக்களிடம் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்து அதற்குரிய நடவடிக்கை  மேற்கொள்ளும் விதமாக குழு அமைத்து பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

அதனடிப்படையில் எனது தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று  வருகின்றன. இக்குழுவின் சென்னை பல்கலைக்கழகம்,அண்ணா பல்கலைக்கழகம், பாரத ரத்னா  டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பல்கலைகழகங்களில் ஆய்வு  செய்யப்பட்டு சீர்மரபினர் பிரிவிலுள்ள மாணாக்கர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் குறித்து ஆய்வு  செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்வாயிலாக சீர்மரபினர்  தொடர்பான அறிக்கை கோரப்பட்டுள்ளது. இக்குழு தேனி, திண்டுக்கல், மதுரை,திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு  நேரிடையாகச் சென்று சீர்மரபினர் சமுதாய மக்கள், சீர்மரபினர் நலச் சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள்  ஆகியோரை நேரில் சந்தித்து கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள  பிரதிநிதிகள் தாங்கள் வேலைவாய்ப்பு, கல்வி வசதி, உதவித்தொகை போன்றவற்றில் சீர்மரபினர்  எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து கருத்துகளை தெரிவித்ததோடு கோரிக்கை மனுக்களாக சமர்ப்பித்துள்ளனர். இக்கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகள் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் அறிக்கையாக  தமிழக முதல்வர் , துணை முதல்வர்  கவனத்திற்கு எடுத்துச் சென்று ஆலோசனை படி உரிய நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என ஆலோசனை குழுத்தலைவர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் இயக்குநர்  நிர்வாக முதன்மை செயலர் டாக்டர்.அதுல்யமிஸ்ரா தெரிவித்தார். முன்னதாக ஆலோசனை குழுத்தலைவர் தலைமையில் குழு உறுப்பினர்கள்  முதுகுளத்தூர் வட்டம் கீழத்தூவல் கிராமத்திற்கு நேரிடையாக சென்று சீர்மரபினர் மக்களை சந்தித்து  கோரிக்கைகளை கேட்டறிந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, பரமக்குடி சார் ஆட்சியர்  பி.விஷ்ணுசந்திரன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலர் இரா.சிவதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) டாக்டர்.எஸ்.எஸ்.கண்ணபிரான் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!