கொலை வழக்கில் ஈடுபட்ட இருவருக்கு ஆயுள் தண்டனை…

கடந்த 2014-ம் வருடம் மதுரை மாநகர் கரிம்சா பள்ளிவாசல் 4வது தெருவை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவரது மகன் மன்னர் மைதீன் என்பவரை கொலை செய்துவிட்டதாக சையது இப்ராஹிம் என்பவர் B1 விளக்குத்தூண் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் முன்விரோதம் காரணமாக மன்னர் மைதீன் என்பவரை இப்ராஹீம்ஷா, ரபீக்@வாழைக்காய் ரபீக் மற்றும் பிரகாஷ் ஆகிய மூவரும் சேர்ந்து கொலை செய்தது விசாரணையின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் மூவரையும் கைது செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இதில் ரபீக் @வாழைக்காய் ரபீக் கடந்த 2015 ம் வருடம் இறந்துவிட்டார். இவ்வழக்கு நேற்று ஐந்தாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் கனம் நீதித்துறை நடுவர் மாண்புமிகு .மதுசூதனன் அவர்கள் இப்ராஹீம்ஷா மற்றும் பிரகாஷ் இருவருக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதமும், கொலை மிரட்டல் பிரிவில் தலா ஒரு வருடம் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

செய்தி வி.காளமேகம் மதுரை

புனித ரமலான் வாழ்த்துக்கள்..