கோவில்பட்டியில் சாலைப்பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி காவல்துறையினர் விழிப்புணர்வு பேரணி..

கோவில்பட்டியில் சாலைபாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு காவல்துறை சார்பில் சாலைப்பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி; விழிப்புணர்வு வாகன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பேரணியை டி.எஸ்.பி. ஜெபராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடக்க நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அமர்நாத், காவல்துறை ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன்,ஜூடி, முத்துலெட்சுமி, போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுடலைமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தொடங்கிய வாகன பேரணி எட்டயபுரம் ரோடு, கதிரேசன்கோவில் ரோடு, பார்க்ரோடு, மெயின்ரோடு, மார்க்கெட் சாலை மற்றும் புதுரோடு வழியாக மீண்டும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது. இதில் ஏரளமான காவலர்கள் ஹெல்மேட் அணிந்து கொண்டு கலந்து,பொது மக்களுக்கு சாலைப்பாதுகாப்பு குறித்தும், ஹெல்மேட் அணிவது அவசியம் குறித்தும் வலியுறுத்தினர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..