தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு 2019 பசுமை விருதுகள்..

தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை, தூத்துக்குடி மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு 2019 முன்னிட்டு பள்;ளி மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பசுமை விருது வழங்கும் விழா கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவர்களிடையே சுற்றுசூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு வலியுறுத்தி பேச்சு, ஓவியம், வினாடி வினா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணாவர்களுக்கு பசுமை விருது வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி பசுமைப்படை மாணவர்கள் சார்பில் இயற்கை பாதுகாப்பு குறித்த நாடகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கினைப்பாளர் பாலகணேசன் தலைமை வகித்தார். கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தலைவர் ஆசியாபார்ம்ஸ் பாபு, பள்ளி கல்வி துணை ஆய்வாளர் செல்லகுருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முகராஜ் அனைவரையும் வரவேற்றார். பள்ளிகளுக்கிடையான போட்டிகளை கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலர் மாணிக்கம் துவக்கி வைத்து பேசினார்.

மாவட்ட கல்வி அலுவலர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு பசுமை விருது மற்றும் சான்றிதழ்களை 18 மாணவர்களுக்கு வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் சுற்றுசூழல் ஆர்வலர் முத்துமுருகன், நாடார் மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியர் கருப்பசாமி உள்ளிட்ட தேசிய பசுமைப்படை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பசுமைப்படை ஆசிரியர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..