குற்றவாளி பட்டியலில் உள்ளவர்களுக்கு கோவில்பட்டியில் காவல்துறை அறிவுரை – திருந்தி வாழ வாய்ப்பு..

கோவில்பட்டி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றவாளி பட்டியலில் உள்ளவர்கள், திருந்தி வாழ்வதற்கும், குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா உத்தரவின் பெயரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் காவல்துறை சார்பில் அறிவுரை வழங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கூட்டத்திற்கு டி.எஸ்.பி ஜெபராஜ் தலைமை வகித்தார். மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீஸார், குற்றவாளி பட்டியலில் உள்ள 24 பேரும், அவர்களது பெற்றோரும் கலந்து கொண்டனர்.

இதில், குற்றவாளி பட்டியலில் உள்ளவர்கள் மீது 110 விதியின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் முன்பு ஆஜராகி உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும். இதில் அவர்கள் தொடர்ந்து 6 மாதங்கள் எந்தவித குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடாமல் இருந்தால் நன்னடத்தை சான்று வழங்கப்படும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என டி.எஸ்.பி. ஜெபராஜ் தெரிவித்தார். இதற்கு குற்றவாளி பட்டியலில் உள்ளவர்களும், அவர்களது பெற்றோரும் என ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து, தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுவோம். மதுபானம் அருந்தி விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்ட மாட்டோம். சாலை விதிகளை மதிப்போம். குடும்பத்தின் சூழ்நிலை கருதி ஒழுக்கமாக நடந்து கொள்வோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இது குறித்து டி.எஸ்.பி.ஜெபராஜ் கூறுகையில் சூழ்நிலையின் காரணமாக பல்வேறு குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருந்தி வாழ்வதற்கு எதுவாக மாவட்ட எஸ்.பி.முரளி ரம்பா உத்தரவின் பெயரில் இது போன்ற நடவடிக்கைககள் எடுத்துள்ளதாகவும், இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெறும் என்றும், குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருந்தி வாழ்வதற்கு இது பெரிதும் துணையாக இருக்கும் என்றும், மேலும் குற்றங்களை முற்றிலுமாக தடுக்க இது உதவியாக இருக்கும் என்றும், நகரில் குற்றங்களை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவது மட்டுமின்றி, ஆங்கங்கே வாகன சோதனைகளும் நடைபெற்றுவதாகவும், காவல்துறையின் இந்த புதிய முயற்சி மக்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது மட்டுமின்றி குற்றங்களும் குறையும் என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..