Home செய்திகள் தமிழக அரசுக்கு ஊராட்சி செயலர்கள் இராமநாதபுரத்தில் நன்றி அறிவிப்பு மாநாடு..

தமிழக அரசுக்கு ஊராட்சி செயலர்கள் இராமநாதபுரத்தில் நன்றி அறிவிப்பு மாநாடு..

by ஆசிரியர்

ஊராட்சி செயலாளருக்கு பதிவுரு எழுத்தர் நிலை ஊதிய அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு மாவட்ட மாநாடு இராமநாதபுரத்தில் நடந்தது. தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் இராமநாதபுரம் மாவட்ட மையம் சார்பில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் கா.ரவி தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் ஏ.குமரேசன், தலைமை நிலைய செயலாளர் பி.கே.பூவேந்திரன், மாவட்ட செயலாளர் ஆர்.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் என்.நாகேந்திரன் வரவேற்றார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்க மாநில தலைவர் ஆர்.சார்லஸ் ரங்கசாமி மாநாட்டை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் மாநாடு சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆர்.ரங்கராஜ் மாநாட்டு பேருரை பேசினார் . தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க மாநில தலைவர் க. பாலசுப்ரமணியன் , மாநில பொதுச் செயலாளர் ஏ.முருகன், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் வி. வேல்முருகன், மாநில பொருளாளர் கே.மகேந்திரன், தென் மண்டல தலைவர் எஸ்.முனியசாமி, டெல்டா மண்டலத் தலைவர் டி.ஆதிமூலம், மாநில துணைத்தலைவர் கே.மகேஸ்வரன், வடக்கு மண்டல தலைவர் வி.சுரேஷ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க முன்னாள் மாநில பொருளாளர் பா.செல்வராஜ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க மாவட்ட தலைவர் நா.அண்ணாதுரை, மாவட்ட அமைப்பு செயலர் பி. முத்துமாரி, மாவட்ட துணை தலைவர் எம். ரவிச்சந்திரன், மாவட்ட துணை தலைவர் எம். புல்லாணி குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.தவமணி (கடலாடி), எஸ்.செந்தாமரைச்செல்வி (முதுகுளத்தூர்), வே.ராமச்சந்திரன் (ஆர்.எஸ்.மங்கலம்), வி.அண்ணாதுரை (திருப்புல்லாணி), எம்.வள்ளி ( திருவாடானை), கே.பூவேந்திரன் (ராமநாதபுரம் ), என். நாகராஜ் (போகலூர்) உள்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் ஏ.கே. திருமாறன் நன்றி கூறினார். ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுரு எழுத்தர் நிலை ஊதிய அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பலர் பேசினர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ் கூறுகையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய 12,524 கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலர்களின் கால் நூற்றாண்டு கோரிக்கையான ஊராட்சி செயலர்களை பதிவுரு எழுத்தர் நிலை ஊதிய அரசாணை வெளியிட கோவையில் நடந்த மாநில மாநாட்டில் கோரிக்கை வைத்தோம். கடந்த 2018 பிப்ரவரியில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தோம். கருணையுடன் பரிசீலிப்பதாக உறுதி அளித்தார். 2018 மார்ச் 16 இல் நடந்த மாநாட்டில் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் உறுதியளித்தார். அதன்படி எங்களது கால் நூற்றாண்டு கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதன்படி எங்களது கோரிக்கையை தற்போது நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். ஊராட்சி செயலர்களின் ஊதியத்தை கருவூலம் மூலம் கிடைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!