Home செய்திகள் மகளிர் பேராற்றல் விழிப்புணர்வு வாக்கத்தான் நடை பயணம்..

மகளிர் பேராற்றல் விழிப்புணர்வு வாக்கத்தான் நடை பயணம்..

by ஆசிரியர்

இராமநாதபுரத்தில் தானம் அறக்கட்டளை சார்பில் முகவை வாக்கத்தான் விழிப்புணர்வு நடை பயணத்தை ராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். மகளிர் சமுதாய, பொருளாதார மேம்பாடு, பெண் கல்வி இழுத்தும் மகளிர் கல்வி, பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்பு , பிளாஸ்டிக், மண் வளம் காப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர், ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்த பெண்கள் ஆளுமை, பெண்களின் பேராற்றல் கருத்தரங்கு நடந்தது. நெய்தல் வட்டார களஞ்சியம் நிர்வாகி கு.பிரசாத் குமார் வரவேற்றார். மதுரை தானம் அறக்கட்டளை கடல் வள பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு திட்ட தலைவர் எஸ்.சிங்கராயர் பேசினார். அழகப்பா பல்கலை., கடலியல் மற்றும் கடலோரவியல் துறை தலைவர் முனைவர் சி.ஸ்டெல்லா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், ராமநாதபுரம் சிகரம் வட்டார களஞ்சிய தலைவி விஜயா, திருப்புல்லாணி வயலக கூட்டமைப்பு வயலக தலைவர் சர்க்கரை, ராமநாதபுரம் சிகரம் வட்டார களஞ்சியம் நெய்தல் இயக்க நிர்வாகி பாப்பா ஆகியோர் பேசினர். ராமநாதபுரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் எல்.பிரபாகரன் நன்றி கூறினார். பள்ளி, மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!